தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வியாழன், 8 ஜூலை, 2021

சிரிக்கலாம் வாங்க

 


சிரிக்கலாம் வாங்க

     காலை முதல் மாலை வரை எப்போதும் உழைத்துக் களைத்தவர்களுக்கு கடவுள் அளிக்கும் பரிசு – சிரிப்பு.

    கணவன் மனைவியைக் கொண்டு அமையும் சிரிப்புகளுக்கே முதலிடம். ஏனென்றால், நண்பர்கள் உறவுகூட நகைச்சுவையால் முறியும். ஆனால், மனைவி கணவன் என்ன கூறினாலும் ரசிப்பர். இருவரும் பெருமையுடையவர்கள்தானே. அந்த எண்ணத்தில் எழுந்தனவே இவை.

 

நகை:1

மனைவி:

ஏங்க ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருக்கீங்க. உங்க நண்பர்தான் முடிவெட்டும் வேலைக்கு அழைத்தாரே. போகலாமில்லையா?

கணவன்:

தண்ணிபோட்டு முடிவெட்டச்சொல்றான். அதனால்தான் போகலை.

 

நகை:2

 

கணவன் : இரண்டு வருஷத்துக்கும் முன்னாடி என்னை விவகாரத்து செய்திட்டு இப்ப ஒன்னா சேர்ந்து வாழாலாம்னு சொல்றியே. ஏன்?

மனைவி :

ஏனா? நான் இல்லாம நீ சந்தோஷமா இருக்கிறத பார்க்கும்போது எப்படி இருக்கும் தெரியுமா?, அதுக்கு இதுவே தேவலாம்னு தோணுது. அதான்.

 

நகை :3

கணவன்:

நல்ல மனைவி இருந்தாதான், நல்ல குடும்பம்னு  ஊர் பாராட்டும். தெரியுமா?

மனைவி:

ஆமா, உண்மைதான் அப்படி இருந்திருந்தா உங்கம்மா  உங்கள ஒழுங்கா வளர்த்திருப்பாங்களே.

 

நகை: 4

கணவன்:

ஏம்மா ஏன் உன் தோழி வீட்டுக்கு வாசப்படியே வெக்கலை?.

மனைவி:

அப்பதான. படி தாண்டா பத்தினின்னு பாராட்டுவாங்களாம்.

 

நகை:5

மனைவி:

ஏங்க நீங்க படிக்கிற புத்தகத்தில் என் படத்தை வெச்சிருக்கீங்க?.

கணவன்:

இந்தப் பக்கம்வரைதான் படிச்சுருக்கோம்னு அடையாளத்துக்காகத்தான்.

 

நகை: 6

மனைவி:

ஏங்க. வெளிநாட்டுக்காரங்க மனைவியைக் கைபிடித்து அழைச்சுட்டு போறாங்க.

கணவன்:

அவனுக்கு இன்னுக்கு இருக்கும் மனைவி அவதான்னு மறந்திடும் அதான்.

 

நகை: 7

மனைவி:

எனக்கு கணக்கு நல்லா தெரியுமுன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க.?

கணவன்:

நீ தினமும் வீட்டைக் கூட்டிப் பெருக்கிறத வெச்சுத்தான்

 

நகை: 8

மனைவி:

நன்கொடைன்னு யார் கேட்டாலும் புண்ணியமுன்னு கொடுக்கிறீங்களே. அவங்க நல்லவங்களா தெரியுமா?

கணவன்:

கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி பார்த்துபார்த்துதான் செய்யாமவிட்டேன். இப்ப அனுபவிக்கிறேன்.

 

நகை:9

மனைவி:

மார்கழி மாசத்தில நோன்பு இருந்தா நல்ல வாழ்க்கைத்துணை அமையும்னு சொன்னாங்க. அதை ஒழுங்கா செஞ்சேன். நீங்க கெடச்சீங்க.

கணவன்:

அதை நான்  செய்யாததனாலே நீ கெடச்ச.

 

நகை: 10

எங்கம்மா அம்மில சட்னி அரைப்பாங்க. இப்பல்லாம் மிக்ஸி. வாசனையே வரலை.

மனைவி:

இனிமே நீங்க மிக்ஸியை, திறந்துவெச்சு அரைங்க. மூக்குக்கு வாசனையில்ல, வாய்க்குச் சட்னியே வரும்.

 

நகை: 11

மனைவி:

மனைவிக்கும் மைக்செட்டுக்கும் போட்டி வெச்சா யார் ஜெயிப்பாங்க.?

கணவன்:

மைக்செட் கரெண்ட் இல்லனா வேலை செய்யாதே.

 

நகை: 12

கணவன்:

கல்யாணத்துக்கு பின்னாடி சண்டை இல்லாம வாழமுடியாதா?

மனைவி:

முகமுடி போட்டுக்குட்டு சாப்பிடமுடியுமா??

 

நகை: 13

மனைவி:

காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் ?

கணவன்:

செல்ஃபோனில் மெதுவா பேசினா காதலி.  செல்போனில்லாம சத்தமா பேசினா மனைவி.

 

நகை: 14

மனைவி:

ஏங்க. எப்ப பாத்தாலும் ஃபோனும் கையுமா? நானும் அப்படி பேசட்டுமா?

கணவன்:

அப்படி பேசாதே? இது ஆண்ட்ராய்டு ஃபோன். பெண்ராய்டு  வந்தா நீயும் பேசலாம்.

 

நகை:15

கணவன்:

என்கூட ஆஃபிஸ்ல வேலை செய்றவர்,  நரின்னு திட்டிட்டார்.

மனைவி:

அவருக்கு அறிவிருந்தா நரின்னு திட்டுவாரா? நரிக்கு யோசிக்கும் புத்தி இருக்குமுன்னுகூட தெரியலை. அவர் திட்டினதபோய் பெரிசா எடுத்துக்கிறீங்களே?

 

**********

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக