தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 8 மே, 2020

சங்கரதாஸ்சுவாமிகளும் வீரபாண்டிய கட்டபொம்மனும் - ஔவை தி.க. சண்முகம் - sankaradas swamigal and veera pandya kattabomman - Avvai T.K.Shanmugam



  1. நாடகம் என்பது நாடகமல்லஉண்மை

சங்கரதாஸ்சுவாமிகளும் வீரபாண்டிய கட்டபொம்மனும் - ஔவை தி.க. சண்முகம்
  1.        புஸ் புஸ்எனப் பாம்புகளின் ஒலி காதில் அக்னி குழம்பாய் நுழையும். இதயம் படபடக்கும். இருட்டில் பாம்பு எங்கு இருக்கிறது எனத் தெரியாது. இரவு நடுநிசி நேரத்தில் கயிறு போல் நெளியும். கொடியா ? பாம்பா ? எனத் தெரியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்வார்கள். நாடகம் நடத்துபவர்களுக்கு இது வாடிக்கையாகி இருந்தது. அப்படி ஒரு முறை போலிநாயக்கனூரில் இருந்து முடிமன்னிக்கு நாடகம்முடித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தது ஒரு கூட்டம். அப்படிப் பயத்துடன் செல்லும்போது ஒரு கருத்த உருவம் ; ஆஜானுபாகுவான தோற்றம் ; வெள்ளை கிருதா ; மீசை ; கையில் வேல்கம்புடன் தடுத்து நிறுத்தியது. ‘உங்க கூட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள்இருக்காரா?” என அந்த உருவம் கேட்டது. ‘இல்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் வரவில்லை. நாளை முடிமன்னிக்கு வந்தால் பார்க்கலாம்எனச் சொன்னதைக் கேட்டு அந்த உருவம் செல்ல அனுமதித்தது. அடுத்தநாள் அந்த உருவம் வந்தால் அது மனிதன் இல்லாவிட்டால் பேய் என அந்தச் சிறுவன் நினைத்துக்கொண்டு காத்திருந்தான். எதிர்பார்த்தபடி அந்த உருவம் வந்தது. எனவே, மனிதன் என்பது உறுதியானது. ‘ஐயா, நான் கட்டபொம்மு, ஊமைத்துரை, தானாப்பதிப்பிள்ளை, பகதூர்வெள்ளை இவர்களைப் பற்றிய உண்மைக்கதையை வைத்திருக்கிறேன். ஆங்கிலேயரிடம் கொண்ட பயத்தால் இவர்களைப் பற்றிய உண்மையை யாரும் சொல்லவில்லை. வெள்ளையத்தேவர் வமிசத்தினர் எழுதிய பழைய ஏடுகள் என்னிடம் உள்ளன. ‘சிறுமூட்டையில் கந்தல் துணியில் பாதுகாத்த சுவடிகளை எடுத்துக் கொடுத்தார். ‘ஒரு சில அடிகளைப் படித்துப்பார்த்தார். நடை அருமையாக இருக்கிறது. இதற்கு உங்களுக்கு என்ன வேண்டும் ?’ என நாடகத்துறையின் தலைமையாசிரியர்எனப் போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் கேட்டார். ‘கண்கள் சிவக்க, குரல் தழுதழுக்கஉண்மையை மக்கள் அறிந்துகொண்டால் போதும். அதற்கு நீங்கள் இக்கதையை நாடகமாக்கி நடிக்கவேண்டும். அதுவே என் ஆசைஎன்றார். பின்னர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த பெருமையினை உலகம் அறிந்துகொண்டது. இவ்வுண்மையை சிறுவனாக இருந்தபோது அறிந்துகொண்டதனை  எனது நாடக வாழ்க்கைஎன்னும் சுயசரிதையில் குறிப்பிடுகிறார் நாடகத் துறையின் தொல்காப்பியர்என அழைக்கப்பெற்ற அவ்வை தி.. சண்முகம்.  
  2.  


கு.ப. ராஜகோபாலன் - ku.pa. ra


வாழ்க்கை ஒரு இசை - கு.. ராஜகோபாலன்
  1. பூ மாதிரி இருப்பார்என ஓர் எழுத்தாளரைக் குறிப்பிடுகிறார் தி. ஜானகிராமன். அவர்தான் கும்பகோணம் பட்டாபிராமய்யர் ராஜகோபாலன். ‘புலமையும் வறுமையும் சேர்ந்தே இருப்பதுஎன்னும் தொடருக்கு இலக்கணமானவர். மகாகவி பாரதியார் படைப்புகளில் நெஞ்சைப் பறிகொடுத்தவர். மகாகவியைப் போலவே வறுமையிலும் இலக்கியம் படைத்தவர். பன்மொழிப் புலமையும், பல்துறைப்புலமையும் மிக்கவர். தமிழுடன் ஆங்கிலம், வங்காள மொழியினைக் கற்றவர். மொழிபெயர்ப்பிலும் புலமை உடையவர். கவிதை எழுதுவதிலும் வல்லவர். .ரா அவர்களின்பாரத தேவிஇதழில் துணையாசிரியரானதும், ‘காளிதாசர்என்னும் மாதவெளியீட்டு இதழை நடத்தியதும், ‘ஷேக்ஸ்பியர் சங்கம்தொடங்கியதும் அவருடைய தமிழ், வடமொழி,  ஆங்கிலப்புலமைக்குச் சான்று.  உங்கள் நூல்களுக்குரிய பணத்தை வாசகர்கள் கொடுப்பதில்லையே எனக்கேட்டபோதுஅவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிக்கிறார்களே, அதுவே நல்ல காரியம் தானே ?’ என்றவர் கு..ரா. ‘வறுமை ஏற ஏற பத்திரிகைகளில் அவன் எழுத்துக்கள் அதிகப்பட்டன. இம் மனநிலைதான் அவன் துறவையும் லட்சியத்தையும் சாதனைகளையும் காட்டும் திறவுகோல்என ந.பிச்சமூர்த்தி குறிப்பிடுகிறார். புதுக்கவிதை முன்னோடியான ந. பிச்சமூர்த்தி அவர்களுடனான நட்புஇரட்டையர்கள்எனக் குறிப்பிடும் அளவிற்கு நெருக்கமானது. ‘காங்க்ரின்என்னும் கடுமையான நோயால் கு..ராவின் காலின் சதைகள் உயிரற்றுப்போயின. முழங்காலுக்கு கீழுள்ள காலை நீக்கிவிடவேண்டும் என மருத்துவர் கூறினார். அச்செயலைத் தடுத்து என்னை நிம்மதியாகச் சாகவிடுங்கள்எனக் கூறினார். ‘காவிரி தீர்த்தம் கொடுங்கள்எனக்கேட்டுக் குடித்து 27.04.1944 அன்று உயிர்விட்டார்.  1902 ஆம் ஆண்டு பிறந்து நாற்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர் கு..ரா. அவர் படைப்புகள் 1933 முதல் 1944 வரை எழுதியவை. கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு  என அனைத்து வடிவங்களிலும் இலக்கியங்களாயின. ‘கு..ரா ஒரு கலைக்கோயில் அல்ல. கோயிலில் ஒரு சிலைதான். ஆனால் அந்தச் சிலை அழகாக இருக்கிறதுஎன இவருடைய சிறுகதைகளை மதிப்பீடு செய்து குறிப்பிட்டு இருப்பது சிறப்பு.
  2. வறுமை வாழ்க்கையிலும் வாழ்வின் அருமையைப் பாடியவர். ‘வாழ்க்கை ஒரு வெற்றி, ஒரு துடிப்பு, ஒரு காதற் பா, ஒரு இசை என்கிறார். மகாகவியான பாரதியாரை தேசியக்கவியாக, குருதேவான தாகூரை வேதாந்த கவியாக மட்டுமே குறுக்கிவிட்டதை எண்ணி வருந்துகிறார். ‘தேசீய கீதங்களைப் பாடின பாவந்தான் பாரதியை தேசபக்த கவியாக்கிவிட்டது போலும். ஸ்ரீ ரவீந்தரரின் முதுமை நூலாகிய கீதாஞ்சலிஆங்கிலத்தில் முதலில் பிரசித்தி அடைந்ததால் தான் அவர் ஒரு வேதாந்த கவி என்று முத்திரை போட்டு அலமாரியில் அடுக்கப்பட்டுவிட்டார். ஒருவருடைய கவிதையின் ஒரு அம்சம் மட்டும் பிரபலமடைவதால் அதில் அதற்கு மேற்பட்ட அம்சங்களும் இருக்கின்றன என்பது அறியப்படாஎன்னும் கூற்று கு..ராவின் ஆழ்ந்த வாசிப்புக்குச் சான்று.