நாக்கு வளையலாம் … வாக்கு
ஆயிரக்கணக்கான
சுவைகளை அறிந்தாலும் நாக்கு கறைபடாது. வாழை, சாம்பார், குழம்பு, கரும்பு, என எது நாக்கில்
பட்டாலும் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. அதனால்தான் பேசும்போது ‘ஒன்றுமில்லாமல்
ஆக்கிவிடுவேன்,” என அச்சுறுத்துகிறது. ‘தூக்கிடுவேன்’ ‘முடிச்சிடுவேன்’ ‘காலி செய்திடுவேன்’
‘வெட்ருவேன்’ ‘போட்ருவேன்’ ‘செஞ்சுருவன்’ என எத்தனையோ சொற்களை திரைநாயகர்கள் குழந்தைகள்
வாயில் மிக எளிதாக வரவழைத்துவிடுகிறார்கள். பெற்றோர்கள், அன்பு, பாசம் என எவ்வளவு அழகாகச்
சொல்லிக்கொடுத்து அழகுபார்த்த நிலைமாறிவிடுகிறது. குழந்தை, வயது கடந்தபிறகு, சமூகம்தானே
சொற்களைக் கற்றுக்கொடுக்கிறது.
‘நாக்கு’ ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் நிறத்தைக்
காட்டிவிடுகிறது. அதனால்தான் கடவுள் அதனை இளஞ்சிவப்பு நிறத்தில் படைத்துள்ளார். ‘நாக்கு’
உணவுச்சுவையினை அறிவதற்கும் ; வளைவதற்குமேற்ப எலும்புத்தசையினால் ஆக்கப்பட்டிருக்கிறது.
ஊடகங்களுக்கெல்லாம் உயிராக நிற்பது நாக்கு.
ஊடகங்கள் வரும் முன்னரே, செய்திகளை
உலகுக்கு உரைத்தது ‘நாக்கு’. மக்களுடைய நாக்கில் இடம்பெற வேண்டும் என்பதனால்தான்
பல விளம்பரங்கள் நாள்தோறும் மீண்டும் மீண்டும் வலம்வருகின்றன. ஏனெனில், நாக்கு எதைச்சொல்கிறதோ
அதுவே வாக்காகிவிடுகிறது ; அதுவே வாழ்க்கையாகிவிடுகிறது ; அதுவே ஆள்கின்ற அளவுக்கு
உயர்த்தியும்விடுகிறது. தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாக்கும் எத்தனையோ பொருட்களை ;
பண்புகளை விளம்பரப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
எனவே, ஒவ்வொருவரும் பேச்சில் மிகக் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது.
கை, கால்களைக் கட்டுப்படுத்துவது எளிது. நாக்கினைக்
கட்டுப்படுத்துவது கடினம். அதனால்தான் ‘தெரியாமல் சொல்லிவிட்டேன். மன்னித்துவிடு’ என்னும்
சொல் பலரிடமிருந்தும் வெளிப்படுவதனைக் காணமுடிகிறது. வாயிருக்கிறது என்பதனால் எதை வேண்டுமென்றாலும்
உண்டால் நோய் வருவது இயல்பு. அதுபோலவே, சொற்களையும் அளவறிந்துபேசவேண்டும். தவறான உணவு
தன்னை மட்டுமே வருத்தும். தவறான சொல்லோ பலரையும் ; பன்னாளும் காயப்படுத்தும். எனவே, கவனமாக நாக்கைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே,
முப்பத்திரண்டு காவலர்களைக் கடவுள் படைத்துள்ளார். அவைதானே பற்கள். அந்தக் காவலர்களின்
கட்டுப்பாட்டை மீறி வரும்போதுதான் ஆபத்தில் சிக்கிவிட (உடைபட) நேர்கிறது.
காதல்மொழி பேசும்போது கொஞ்சிய அதே நாக்கு தான்
திருமணத்திற்குப் பின் வசைபாடவும் செய்கிறது. திருமணத்திற்கும் முன் ‘ஸ்ரீதேவி’ என்றவன்
திருமணத்திற்கு பின் ‘மூதேவி’ என்கிறான். ‘மண்மீது
சொர்க்கம்வந்து பெண் என்று ஆனதே” எனத் திருமணத்திற்கு முன் பாடுவான். “மரணம் என்னும்
தூது வந்தது ; அது மங்கை என்னும் வடிவில் வந்தது” எனத் திருமணத்திற்குப் பின் பாடுவான்.
திருமணத்திற்கு முன் இருசக்கரவாகனத்தில் செல்லும்போது “எண்பது கிலோமிட்டர் வேகத்தில்
சென்றாலும். ‘வேகம். இன்னும்வேகம்’ என்பாள். திருமணத்திற்குப் பின் ‘மெல்ல போ ; மெல்ல
போ, கோட்டையாவா பிடிக்கப்போற” என வசைபாடுவாள். எப்படி பேசிய நாக்கு இன்று இப்படி பேசுகிறதே
என எண்ணுவது இயல்புதானே?
மனிதர்களைமட்டுமே இந்நாக்கு வசைபாடுவதில்லை. இயல்பான
பொருட்களையும் வசைபாடுகிறது. அதுவும் காதலன் உடன் இருக்கும்போது இனித்த புல்லாங்குழலின்
இசையானது, அவன் பிரிந்த பின் துன்பமாகிவிடுகிறது. ஏனென்றால், தலைவனுடைய பிரிவை அந்த இசை சுட்டிக்காட்டிவிடுகிறதுதானே?
இவ்வாறு துன்பம்செய்வதால்தான் உன்னைச் சுட்டுவிடுகிறார்கள்
எனப் புல்லாங்குழலைப் பழிக்கிறாள் தலைவி. மூங்கிலில் துளையிடுவதனால்தானே இசை பிறக்கிறது
; புல்லாங்குழலாகிறது. அதனை எண்ணி அவள் வசைபாடுவதனை,
இம்மையால் செய்ததை இம்மையேயாம் போலும்
மும்மையே யாமென்பார்
ஓரார்காண் – நம்மை
எளியர் என நலிந்த
ஈர்ங்க்குழலார் ஏடி !
தெளியச் சுடப்பட்ட
வாறு. (திணைமாலை நூற்றைம்பது – 123)
என்னும் பாடல்
எடுத்துக்காட்டுகிறது. ஒருவர் தவறுசெய்தால் அடுத்தபிறவியில் அத்துன்பத்தை அனுபவிக்கவேண்டிவரும்
எனக் கூறுவது தவறு. அது இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும் என்கிறாள் தலைவி. உங்களுக்கு
ஐயமாக இருந்தால் புல்லாங்குழலைப் பாருங்கள் என்கிறாள். “புல்லாங்குழலானது இப்பிறவியில்
துன்பம் செய்யப்போகிறது என்பதனை அறிந்தே அதனை முன்பே சுட்டுவிட்டார்கள்” எனக் கூறுகிறாள்
தலைவி. தலைவியின் பிரிவுத்துயரை புலவர் கணிமேதையார்
இப்பாடலில் எடுத்துக்காட்டியுள்ள திறத்தை என்னென்று வியப்பது! அருமைதானே?
வலியவர்கள் எளியவர்களைத் துன்புறுத்துவது கொடுமையிலும்
கொடுமை. வண்டிமாடு அமைதியாக இழுத்துச்செல்கிறதே என அதற்கு உணவிட்டு மகிழாமல், அளவுக்கு
அதிகமாக சுமையினை ஏற்றி அதன் வாலை முறுக்கி வண்டி ஓட்டுவது எத்துணைக் கொடுமை? வாயில்லா
உயிரை (ஜீவனை) கொடுமைப்படுத்தலாமா? “வாய்தான் இருக்கிறதே, எப்படி வாயில்லா உயிராயிற்று?”
என்றுதானே கேட்கிறீர்கள். வாயிருந்தாலும் பேச முடியாத ; தன் துன்பத்தை வெளிப்படுத்த
முடியாத உயிர்கள் அனைத்தும் ‘வாயில்லா உயிர்கள்’தான்.. அவ்வாறே மனிதர்களும் தங்கள்
துன்பத்தை வெளியே சொல்லாமல் இருந்தால் அவர்கள் மனிதர்களாகார் ; வாயில்லா உயிர்களாகவே
மதிப்பிடுவர். ஏதாவது துன்பம் நிகழப்போகிறது ; நிகழும் எனத் தெரிந்தாலே, உடனடியாக சத்தமான
குரலை எழுப்பி உதவிகேட்கவேண்டும். குரல் எழுப்பத் தயங்கினாலே குற்றவாளிகளுக்கு பலம்
கூடிவிடும். காகமானது தங்கள் இனத்திற்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனடியாக கரைந்து அனைத்துக்காக்கைகளையும்
கூட்டி எதிரிகளை விரட்டிவிடுகிறதே. அந்தப் பாடத்தை ஒவ்வொருவரும் கற்கவேண்டும்தானே?
அவ்வாறு, தன்னைக் காத்துக்கொள்ள உதவும் நாக்கிற்கு,
நீங்கள் நன்றிக்கடனாக ஏதாவது செய்யவேண்டுமெனில், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். தூய்மை
என்றால் அழுக்கு சேராமலா? எனக் கேட்காதீர்.
உண்மையை மட்டுமே பேசுவதே நாக்கிற்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன். அதற்காக
வேப்பந்தழையால் தூய்மை செய்வதனை விட்டுவிடாதீர்கள்.
புல்லாங்குழல் குறித்து ஒரு நகைச்சுவை சொல்லட்டுமா?.
புல்லாங்குழலை வாங்க ஒருவன் கடைக்கு வந்தானாம். அவன் நீண்ட நேரம் அங்கேயே ஒவ்வொரு புல்லாங்குழலாய்
எடுத்துப்பார்த்தானாம். கடைக்காரர் ‘நான் உங்களுக்கு உதவட்டுமா” எனக் கேட்டாராம். “ஏன்,
உங்கள் கடையில் எல்லா புல்லாங்குழலும் ஓட்டையாக இருக்கிறது” எனக் கேட்டானாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக