தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 16 ஜூலை, 2019

தமிழ் அறிவோம்- பிழையைத் தவிர்ப்போம் - Learn Tamil

தமிழ் றிவோம்- பிழையைத் தவிர்ப்போம்
       தமிழ் என்னும் சொல்லே மெய்யெழுத்துக்களின் மூன்று இனங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ’த்என்பது வல்லினத்தையும்ம்என்பது மெல்லினத்தையும்ழ்என்பது இடையினத்தையும் எடுத்துரைக்கிறது. ஒரு வீட்டிலோ அல்லது நாட்டிலோ வன்மையானவர் முன்னிற்க மென்மையானவர் இடையில் நிற்க இடைநிலையில் உள்ளவர் பின்னின்று காக்க வேண்டும் என்னும் அறத்தை உணர்த்துவதாக இச்சொல்லமைப்பு அமைந்துள்ளதனை எண்ணி வியக்கமுடிகிறது.
       க்ச்ட்த்ப்ற் - வல்லினம், ங்ஞ்ண்ந்ம்ன் - மெல்லினம், ய்ர்ல்வ்ழ்ள் - இடையினம் என வரையறுக்கப்பட்டுள்ளதனை அனைவரும் அறிவீர். ஆனால் அவ்வெழுத்துக்கள் ஒலிக்கும் முறையினைப் பயிற்சி செய்தால் தமிழின் அருமை மேலும் நன்கு விளங்கும். க்ச்ட்த்ப்ற் என்னும் ஐந்து எழுத்துக்களைப் பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாக ஒலித்துப்பார்த்தால் காற்று அடைபடும் இடத்தை அறிந்து கொள்ள இயலும். க்  - என ஒலிக்கும் பொழுது அண்ணத்தின் பின்பகுதியில் (உள் நா பகுதியில்) காற்று அடைக்கப்படுகிறது.  ச் - என ஒலிக்கும் பொழுது சற்று முன்னும்ட் - என ஒலிக்கும் பொழுது இடை அண்ணத்திலும், த் - என ஒலிக்கும் போது அண்ணமும் பல்லும் (அண்பல்) இணையும் இடத்திலும்ப் என ஒலிக்கும் பொழுது இதழிலும், காற்று அடைக்கப்பட்டு ஒலிப்பதனை உணரமுடியும். அவ்வாறே ங்ஞ்ண்ந்ம் என்னும் எழுத்துக்களை ஒலிக்கும் பொழுது மேற்கூறிய முறைப்படிச் சீராக அவ்விடத்திலேயே ஒலிப்பதனை உணர்ந்துகொள்ள முடியும். ற்ன் என்னும் எழுத்துக்களும் அவ்வாறே ஓரிடத்தையே ஒலிப்பிடமாகக் கொண்டு ஒலிப்பதனை அறிந்துகொள்ளமுடியும். ஓரிடத்தில் ஒலிக்கும் எழுத்துக்களை இன எழுத்துக்கள் எனலாம். எழுதும் போது எழுதுகோலைக் காணாத கண் போலவே நாம் பல முறை இவ்வெழுத்துக்களை ஒலித்திருந்தாலும் இவ்வொழுங்கு முறையில் ஒலிப்பது குறித்து எண்ணிப்பார்த்தது இல்லை. ஒலிப்பு முறையினை பயிற்சி செய்தால் க்ங், ச்- ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன் என எளிதில் இன எழுத்துக்களை உணர்ந்துகொள்ளமுடியும். இன எழுத்துக்கள் என்பதற்கான காரணத்தையும் அறிய இயலும்.
       சொற்களை எழுதும்போது ந--ண என்னும் மூன்றில் எது வரும் எனச் சிலருக்குக் குழப்பம் வருவதுண்டு. இதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்க இன எழுத்துக்களின் ஒழுங்குமுறையினை அறிதல் வேண்டும்.
ந் - என்னும் எழுத்து இணையாக உள்ள  த் - உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுதந்தை.
ன் என்னும் எழுத்து இணையாக உள்ள ற்- உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டு - நன்றி.
ண்என்னும் எழுத்து இணையாக உள்ள ட்- உடன் மட்டுமே வரும்
எடுத்துக்காட்டுகண்டேன்.
க்- என்னும் எழுத்து இணையாக உள்ள ங் உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுகங்கை,
ச் - என்னும் எழுத்து இணையாக உள்ள ஞ் உடன் மட்டுமே வரும். எடுத்துக்காட்டுமஞ்சள்
ப் - என்னும் எழுத்து இணையாக உள்ள ம் உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுகங்கை,
இனத்தின் அருமையை உணர்ந்து வாழ்ந்தால் பெருமை வரும் தானே.
**********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக