தமிழ்மொழி ஆசிரியராக
காந்தியடிகள்
இலக்கியம், அழகிய வரலாற்று
ஆவணம். எனவே நாட்டு விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் ஓர் இதழின்
ஆசிரியர்களாகத் தம்மை மாற்றிக்கொண்டனர். அண்ணல் காந்தியடிகள்
யங் இந்தியா, இந்தியன் ஒப்பினியன், ஹரிஜன், நவஜீவன்
என்னும் நான்கு வார இதழ்களின் ஆசிரியராக விளங்கினார். இவ்வெண்ணத்திற்கு
அடிப்படையாக அமைந்தது அவரிடம் இருந்த நாட்டுப்பற்று மட்டுமன்று. மொழிகளிடம்
கொண்டிருந்த ஈடுபாடும் முக்கியக் காரணமாகும். தென் ஆப்பிரிக்காவில்
இருந்தபோதே மொழியாசிரியராகத் தம்மை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி மகிழ்ந்தார். “தமிழ்ச்சிறுவர்கள்
எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால்
அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள்
அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே அவர்களுக்கு
நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும்
எளிதானதே” எனச் சத்தியசோதனையில்’ இலக்கியப்
பயிற்சி’ என்னும் தலைப்பில் கூறுகிறார். தமிழ்மொழியிடம்
மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்ட அண்ணல் காந்தியடிகள், இராஜாஜி மகனிடம் தந்தைக்கு தமிழ்மொழியிலேயே கடிதம் எழுதல்
வேண்டும் என அறிவுறுத்தினார். அதுவே தாய்மொழிக்குக் கொடுக்கும் மதிப்பு என்றார்.
அண்ணல் பாடம் நடத்தியதன் விளைவாகத் குழந்தைகளின் கற்கும்
திறனை நன்குணர்ந்தார். “எப்பொழுதும் குழந்தைகள் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதைவிட
அதிகமாகவும் கஷ்டமின்றியும் காதால் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்”. பெற்றோர்கள்
கற்பிப்பதில் காட்டவேண்டிய ஈடுபாடு குறித்தும் விளக்கியுள்ளார். “அனுபவத்தினாலும்
சோதனைகளினாலும் உண்மையானதொரு கல்வி முறையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு
இருந்த்து. ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். அதாவது
மிகவும் சிறப்பான ஒரு நிலையில் பெற்றோரினாலேயே உண்மையான கல்வியினை அளிக்கமுடியும்” எனத் தம்
சத்தியசோதனையில் ‘பள்ளி ஆசிரியனாக’ என்னும்
தலைப்பில் குறிப்பிடுகிறார் அண்ணல் காந்தியடிகள்.