கண்கள் உறவை வளர்க்கும் - Eye -grows relationship
அறம் என்பது வாழ்க்கை முறைமை. இப்படி
வாழ்ந்தால் தான் அழகு என ஆய்ந்து மனநிறைவுடன் வாழக்கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். அன்பை அடித்தளமாகக்கொண்டு
குடும்பம் என்னும் ஒழுங்கு முறைமையைக் கொண்டு, தாய், தந்தை, மகன், தமக்கை, தம்பி, அண்ணன், சிற்றப்பன், சித்தி, அத்தை, மாமன், அத்தான், கொழுநன் (கணவன்), மனைவி, கொழுந்தன் (கணவனின்
உடன்பிறப்பு) கொழுந்தி (மனைவியின் உடன்
பிறப்பு) பாட்டன், பாட்டி என உறவுகளுக்குப் பெயர்வைத்துக் கூடிவாழக் கற்றுக்கொடுத்தனர். எப்படி
வாழ வேண்டும் எனக் கற்பது மட்டுமன்று எப்படி வாழக்கூடாது எனக் கற்பதும் நன்று. அன்பில்லாது
வாழ்தல் கூடாது. அன்பு மழை போல் பொழிதல் வேண்டும். நிலம்பார்த்து
மழை பெய்தல் இல்லை. அதுபோல் அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டல் வேண்டும். மழை இல்லாவிடில்
மரத்தில் கிளை ஏது ? அவ்வாறே அன்புமழை இல்லாவிடில் கிளை என்னும் சுற்றம் ஏது ? நட்பு ஏது ? எனவே அன்பு
என்னும் ஈரத்தை கண்களில் பெருக்கி வாழ்தல் வேண்டும். முதுமொழிக்காஞ்சியில் “அல்ல பத்து” என்னும்
தலைப்பில் “ஈரமில்லாதது கிளை நட்பு அன்று” என மதுரைக்கூடலூர்கிழார்
குறிப்பிடுகிறார்.
நா கூட சில நேரங்களில் வறண்டுவிடுகிறது. கண்கள்
எப்போதும் கருணை என்னும் ஈரத்துடன் விளங்குவதால் தானே ஒளிவீசுகிறது. எண் சாண்
உடம்புக்குத் தலையே தலை. தலைக்குக் கண்கள் தானே.