தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 16 ஜூலை, 2019

நட்பைப் போற்றிய தமிழ் இலக்கியம் - The Excellene of Friendship

நட்பைப் போற்றிய தமிழ் இலக்கியம்
      நட்பு ஆராய்ந்து கொள்ளத்தக்கது. ஏனெனில் நட்பு ஒருவரின் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும். தாய், தந்தையுடனான நெருக்கம் பள்ளி, கல்லூரி என உயர்கல்விக்குச் செல்லச்செல்ல குறைந்துவிடுகிறது. நட்புக்கான வாய்ப்புப் பெருகிவிடுகிறது. எனவே நல்ல நட்பினை ஆராய்ந்து தேர்ந்துகொள்ள வேண்டும். ‘தோள் கொடுப்பான் தோழன்என்பது தானே பழமொழி. நீ உன் நண்பனைப்பற்றிச்சொல் நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்பது உலகவழக்கு. நகைக்கப்பேசி விட்டு பொழுதுபோக்குவது ஒரு வகைவிளையாடுவதற்குத் துணைவேண்டி நட்பு கொள்வது ஒருவகை. படிப்பதற்காக நட்பு கொண்டு பயன்கொள்வது ஒருவகை. இவ்வகை நட்புகள் கொடியும் மரமும் ஒருங்கே வளர்வதுபோல் இருவரின் உயர்வுக்கும் துணைசெய்யுமாயின் நன்றே. அப்படியில்லாமல் மரத்தின் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளரும் ஒட்டுத்தாவரம் போல் கொடிவளர மரம்தளரக்கூடாது. பொழுதுபோக்குக்காக மட்டுமே அமையும் நட்பு உயர்ந்ததாகாது. உயர்வுக்குத் துணைநின்று  தாழ்வுக்குத் தோள்கொடுக்கும் நட்பே உயர்ந்தது. ஒரு மணிநேரம் பேசிவிட்டு என்ன பேசினோம் என எண்ணிப்பார்த்தால் பயனுடையது ஒன்றுமில்லையெனில் அந்நட்பை தவிர்க்கலாம். வளரும் பருவத்தில் கிடைக்கும் காலம் அரிதானது. அதனை முறையாகப் பயன்படுத்தவேண்டியது அவசியம். வீணாக்குதல் கூடாது. அருமையான நட்பு கிடைத்துவிட்டால் வாழ்வின் உயர்வுக்கு வேறெதுவும் தேவையில்லை. எத்திசைக்குச் சென்றாலும் அங்கு நட்பு உண்டெனில் வாழ்க்கை இனிதாகும். இல்லையெனில் பாழ் என்கிறது பழம்பாடல் ஒன்று.
மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்சென்ற
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்று அறிவில்லா உடம்பு


இல்லத்திற்குப் பெண் ; நல் அவைக்குச் சான்றோர்மனிதனுக்கு அறிவுடைய உடல், இவை  இல்லாவிடில் எப்படி வீணோ அவ்வாறே நட்பில்லா இடத்தில் வாழ்வதும் வீண் என்கிறார் செய்யுளியல்என்னும் நூலை எழுதிய செய்யுளியலுடையார். போற்றாத நல்லநட்பு மறைந்துவிடுவதுபோல் இந்நூலும் மறைந்துபோய்விட்டதனை மயிலை சீனி.வேங்கடசாமிமறைந்துபோன தமிழ்நூல்கள்என்னும் நூலில், கிடைத்த இப்பாடலின் வழி உணர்த்துகிறார்

கடல் உண்ட தமிழ் - Sea swallowed Tamil Literature

கடல் உண்ட தமிழ்
பழங்காலத்தில் முன்னோர்கள் தங்கள் புலமையினை வெளிப்படுத்த பனையோலையை எழுதும்பொருளாகப் பயன்படுத்தினர். பொறுப்பும் தமிழார்வமும் கொண்ட சான்றோர்கள் பனை ஓலையின் தன்மைக்கேற்ப, அவை அழியும் காலத்திற்கு முன் வேறோர் படி எடுத்து இலக்கியங்களைக் காத்துவந்தனர். அவ்வாறு படி எடுத்ததன் விளைவாகவே இன்று பல நூல்கள் இலக்கியங்களாகித் தமிழரின் பெருமையை உணர்த்துகின்றன. கடல்கோள் முதலான காரணங்களில் தப்பிப்பிழைத்த நூல்களே இன்று இலக்கியங்களாக இடம்பெற்றுள்ளன. அதில் சிக்குண்டு காணாமல் போனவை எண்ணற்றன.
      பாண்டிய நாடு கடல்கோளால் அழிந்தபோது சங்ககால இலக்கியங்கள் பல மறைந்துபோயின. பல துறைகளிலும் விஞ்சி நின்ற தமிழரின் பேரறிவினை எடுத்துரைக்கும் இலக்கியங்கள் காணாமல் போனதனை எண்ணி வருந்திப் பாடிய செய்யுளினைமறைந்துபோன தமிழ் நூல்கள்என்னும் நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி எடுத்துக்காட்டுகிறார்.
ஏரணம் உருவம் யோகம் இசை கணக்கிரதம் சாலம்
தாரணம் மறமே சந்தம் தம்பநீர் நிலம் உலோகம்
மாரணம் பொருள் என்றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்டது அந்தோ வழிவழிப் பெயரும் மாள.(.326)

என்னும் இப்பாடல் தமிழரின் பல்துறை ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. அளவைமந்திரம், உடல் ஒழுங்குமுறை, இசை நயம், கணக்கு மொழி, பொருள்கள், நிலைத்திருக்கும் கலை, வீரம், இசைப்பாடல், காக்கும் நீர், நிலம், உலோகம், மாயவித்தை, உவமை என அனைத்து நுட்பங்களையும் கொண்ட ஏடுகளை வாரி வாரணம் என்னும் கடல் யானைக் கொண்டதை இப்பழஞ்செய்யுள் புலப்படுத்துகிறது. கோயில்கள் கட்டுவதற்குரிய கட்டுமானக் கலைத்திறன், கோள், நட்சத்திரம் என நாளினை வகுத்துக் காட்டிய வானத்தைப் பற்றிய அறிவு, கடல் போக்கினைக் கண்டறிந்து கப்பலைச் செலுத்திய ஆற்றல்,  நீர் நிலைகளைப் பாதுகாத்த முறைமை, நிலத்தை பண்படுத்தி விளைவித்த பாங்கு , போர்க்கருவிகள் செய்த நுட்பம், வீரத்தைக் கையாண்ட முறைமை, இலக்கண முறைமைப்படி செய்யுள்கள் எழுதிய சிறப்பு என அனைத்து நுட்பங்களையும் எடுத்துரைக்கும் ஏடுகளைக் கடல்கொண்டு சென்றுவிட்டதே என வருந்தி நிற்கும் தமிழ்ப்புலவரின் நிலையினை இப்பாடல் எடுத்துரைக்கிறது.


பாவேந்தர் காட்டிய படி(ப்)பாதை - 'How to read literature' by Poet Bharathidasan

பாவேந்தர் காட்டிய படி(ப்)பாதை
இலக்கியம் என்பது ஒரு கலை ; இது எழுத்துக்களின் அழகிய கூட்டணி ; ஒரு மொழிப்பெண்ணின் அழகினை அடையாளம் காட்டும் அணிகலன் , என அடுக்கிக்கொண்டே போகலாம். நீ யார் ? எனக் கேட்டால் நான் இன்னாருடைய மகன் அல்லது இன்னாருடைய பேத்தி (பெயர்த்தி) எனக் கூறுவது தானே வழக்கம். அப்படித்தான் இலக்கியமும் அம்மொழிக்குரியவரை அடையாளம் காட்டி இனத்தின் பெருமையினை அறிமுகம்செய்துவிடுகிறது. இவ்வாறு செய்வதற்கு ஓர் குடும்பத்தில் வாழ்ந்த முன்னோரின் வரலாற்றினை தெரிந்துகொள்வதுதான் நன்று. அப்படித்தான் ஒரு மொழியின் பெருமையினைப் பிறருக்கு அறிமுகம் செய்யவேண்டுமாயின் இலக்கியங்களின் வரலாற்றினை அறிந்துவைத்திருத்தல் வேண்டும். முன்னோர் பெருமையுடன் வாழ்ந்ததனை மூன்றாம் தலைமுறை அறிவதில்லை. தாத்தாவை உலகமே அறிந்திருக்க, அவருடைய பேரன் அறிந்திருக்கமாட்டான். இவ்வாறு வாழ்வதால் தாத்தாவிற்கு எந்த இழுக்கும் இல்லை. ஆனால் பேரனுக்கு ? அப்படித்தான் வளமான இலக்கியங்களை இன்றைய தலைமுறைகள் அறியாமலிருப்பதும். அதன் விளைவாகவே தமிழ்த்தாய்வாழ்த்தினைக் கூட ஆங்கிலமொழியில் எழுதிப்படிக்கும் அவலம். இந்த அவலநிலை ஏற்படும் என்பதனை முன்பே எண்ணிய பாவேந்தர் பாரதிதாசன் ஒரு குழந்தையை அழைத்து நூலைப் படி சங்கத்தமிழ் நூலைப் படி ; முறைப்படி நூலைப் படிஎன அறிவுறுத்துகிறார். தொலைக்காட்சி, கைப்பேசி எப்போது பார்க்கவேண்டும் எனக் கேட்காத குழந்தை, எப்போது படிக்கவேண்டும் ? எனக் கேட்கிறது.  அதனால்காலையில் படி; கடும்பகல் படி ; மாலை இரவு பொருள்படும்படி நூலைப்படிஎன்கிறார். அடுத்து எப்படிப் படிக்கவேண்டும் ? எனக்கேட்டு இல்லாத வாலை (மனதுக்குள்) ஆட்டுகிறது.  “கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி ; கற்கத்தான் வேண்டுமப்படிஎன்கிறார். படிக்காவிட்டால் ? எனக்கேட்ட அச்சுட்டிக்குழந்தையிடமேகல்லாதார் வாழ்வதெப்படி ?” எனக்கேட்கிறார். இவ்வுலகில் சிறப்பாக வாழக் கல்வி அவசியம் எனத் தெளிவுறுத்துகிறார். பிறகு எதைப் படிக்கவேண்டும் எனக் கேட்டவுடன்அறம் படி ; பொருளைப் படி ; அப்படியே இன்பம் படி ; இறந்த தமிழ் நான்மறை பிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படிஎனக்கூறுகிறார். “கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்என்னும் முதுமொழியை நினைவுறுத்துகிறார். எது தன் வாழ்வுக்குப் பொருந்துமோ அதனைக் கண்டு படிப்பவன் வாழ்வில் வல்லவனாக வருவான் என இதற்குப் பொருள் காணவும் இயலும். மேலும்அகப்பொருள்படி ; அதன்படி புறப்பொருள் படி ; நல்லபடி புகப்புக, படிப்படியாய் புலமை வரும் ; என்சொற்படி நூலைப் படிஎன்கிறார். தமிழர் வாழ்க்கை முறையின் அருமையினை எடுத்துக்காட்டும் அகப்பாடல்களையும் புறப்பாடல்களையும் அறிந்தாலே புலமை தானேவரும் எனக் கூறுகிறார். ஆங்கிலப்பள்ளியில் படிக்கும் அக்குழந்தை தமிழில் படிப்பது கடினமாக இருக்கிறது எனக் கூறியது. “தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப்படிஅடங்கா இன்பம் மறுபடி ஆகும் என்ற ஆன்றோர் சொற்படிநூலைப்படிஎனக்கூறி ஊக்கமளிக்கிறார் பாவேந்தர்.

படி என ஒவ்வொரு வீட்டிலும் கட்டுவது எதற்காக ? படியில் ஏறினால் (படித்தால்) தானே உயரத்திற்குச் செல்லமுடியும் என உணர்த்துவதற்குத் தானோ ?

தமிழ்மொழி ஆசிரியராக காந்தியடிகள் -Mahatma Ghandhi as Tamil Teacher

தமிழ்மொழி ஆசிரியராக காந்தியடிகள்
இலக்கியம், அழகிய வரலாற்று ஆவணம். எனவே நாட்டு விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் ஓர் இதழின் ஆசிரியர்களாகத் தம்மை மாற்றிக்கொண்டனர். அண்ணல் காந்தியடிகள் யங் இந்தியா, இந்தியன் ஒப்பினியன், ஹரிஜன், நவஜீவன் என்னும் நான்கு வார இதழ்களின் ஆசிரியராக விளங்கினார். இவ்வெண்ணத்திற்கு அடிப்படையாக அமைந்தது அவரிடம் இருந்த நாட்டுப்பற்று மட்டுமன்று. மொழிகளிடம் கொண்டிருந்த ஈடுபாடும் முக்கியக் காரணமாகும். தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே மொழியாசிரியராகத் தம்மை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி மகிழ்ந்தார். “தமிழ்ச்சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால் அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதேஎனச் சத்தியசோதனையில்இலக்கியப் பயிற்சிஎன்னும் தலைப்பில் கூறுகிறார். தமிழ்மொழியிடம் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்ட அண்ணல் காந்தியடிகள்இராஜாஜி மகனிடம் தந்தைக்கு தமிழ்மொழியிலேயே கடிதம் எழுதல் வேண்டும் என அறிவுறுத்தினார். அதுவே தாய்மொழிக்குக் கொடுக்கும் மதிப்பு என்றார்.  
அண்ணல் பாடம் நடத்தியதன் விளைவாகத் குழந்தைகளின் கற்கும் திறனை நன்குணர்ந்தார். “எப்பொழுதும் குழந்தைகள் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதைவிட அதிகமாகவும் கஷ்டமின்றியும் காதால் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்”. பெற்றோர்கள் கற்பிப்பதில் காட்டவேண்டிய ஈடுபாடு குறித்தும் விளக்கியுள்ளார். “அனுபவத்தினாலும் சோதனைகளினாலும் உண்மையானதொரு கல்வி முறையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இருந்த்து. ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். அதாவது மிகவும் சிறப்பான ஒரு நிலையில் பெற்றோரினாலேயே உண்மையான கல்வியினை அளிக்கமுடியும்எனத் தம் சத்தியசோதனையில்பள்ளி ஆசிரியனாகஎன்னும் தலைப்பில் குறிப்பிடுகிறார் அண்ணல் காந்தியடிகள்.


தமிழ் அறிவோம்- பிழையைத் தவிர்ப்போம் - Learn Tamil

தமிழ் றிவோம்- பிழையைத் தவிர்ப்போம்
       தமிழ் என்னும் சொல்லே மெய்யெழுத்துக்களின் மூன்று இனங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ’த்என்பது வல்லினத்தையும்ம்என்பது மெல்லினத்தையும்ழ்என்பது இடையினத்தையும் எடுத்துரைக்கிறது. ஒரு வீட்டிலோ அல்லது நாட்டிலோ வன்மையானவர் முன்னிற்க மென்மையானவர் இடையில் நிற்க இடைநிலையில் உள்ளவர் பின்னின்று காக்க வேண்டும் என்னும் அறத்தை உணர்த்துவதாக இச்சொல்லமைப்பு அமைந்துள்ளதனை எண்ணி வியக்கமுடிகிறது.
       க்ச்ட்த்ப்ற் - வல்லினம், ங்ஞ்ண்ந்ம்ன் - மெல்லினம், ய்ர்ல்வ்ழ்ள் - இடையினம் என வரையறுக்கப்பட்டுள்ளதனை அனைவரும் அறிவீர். ஆனால் அவ்வெழுத்துக்கள் ஒலிக்கும் முறையினைப் பயிற்சி செய்தால் தமிழின் அருமை மேலும் நன்கு விளங்கும். க்ச்ட்த்ப்ற் என்னும் ஐந்து எழுத்துக்களைப் பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாக ஒலித்துப்பார்த்தால் காற்று அடைபடும் இடத்தை அறிந்து கொள்ள இயலும். க்  - என ஒலிக்கும் பொழுது அண்ணத்தின் பின்பகுதியில் (உள் நா பகுதியில்) காற்று அடைக்கப்படுகிறது.  ச் - என ஒலிக்கும் பொழுது சற்று முன்னும்ட் - என ஒலிக்கும் பொழுது இடை அண்ணத்திலும், த் - என ஒலிக்கும் போது அண்ணமும் பல்லும் (அண்பல்) இணையும் இடத்திலும்ப் என ஒலிக்கும் பொழுது இதழிலும், காற்று அடைக்கப்பட்டு ஒலிப்பதனை உணரமுடியும். அவ்வாறே ங்ஞ்ண்ந்ம் என்னும் எழுத்துக்களை ஒலிக்கும் பொழுது மேற்கூறிய முறைப்படிச் சீராக அவ்விடத்திலேயே ஒலிப்பதனை உணர்ந்துகொள்ள முடியும். ற்ன் என்னும் எழுத்துக்களும் அவ்வாறே ஓரிடத்தையே ஒலிப்பிடமாகக் கொண்டு ஒலிப்பதனை அறிந்துகொள்ளமுடியும். ஓரிடத்தில் ஒலிக்கும் எழுத்துக்களை இன எழுத்துக்கள் எனலாம். எழுதும் போது எழுதுகோலைக் காணாத கண் போலவே நாம் பல முறை இவ்வெழுத்துக்களை ஒலித்திருந்தாலும் இவ்வொழுங்கு முறையில் ஒலிப்பது குறித்து எண்ணிப்பார்த்தது இல்லை. ஒலிப்பு முறையினை பயிற்சி செய்தால் க்ங், ச்- ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன் என எளிதில் இன எழுத்துக்களை உணர்ந்துகொள்ளமுடியும். இன எழுத்துக்கள் என்பதற்கான காரணத்தையும் அறிய இயலும்.
       சொற்களை எழுதும்போது ந--ண என்னும் மூன்றில் எது வரும் எனச் சிலருக்குக் குழப்பம் வருவதுண்டு. இதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்க இன எழுத்துக்களின் ஒழுங்குமுறையினை அறிதல் வேண்டும்.
ந் - என்னும் எழுத்து இணையாக உள்ள  த் - உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுதந்தை.
ன் என்னும் எழுத்து இணையாக உள்ள ற்- உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டு - நன்றி.
ண்என்னும் எழுத்து இணையாக உள்ள ட்- உடன் மட்டுமே வரும்
எடுத்துக்காட்டுகண்டேன்.
க்- என்னும் எழுத்து இணையாக உள்ள ங் உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுகங்கை,
ச் - என்னும் எழுத்து இணையாக உள்ள ஞ் உடன் மட்டுமே வரும். எடுத்துக்காட்டுமஞ்சள்
ப் - என்னும் எழுத்து இணையாக உள்ள ம் உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுகங்கை,
இனத்தின் அருமையை உணர்ந்து வாழ்ந்தால் பெருமை வரும் தானே.
**********