தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கல்வி அழியாத செல்வம்-Education is immortal wealth

 

கல்வியே அழியாச் செல்வம்

எத்தனை ஆண்டு தவம் செய்கிறோமோ அத்தனை சிறப்புடைய வரத்தைப் பெறமுடியும். இது கல்விக்கு மிகவும் பொருந்தும்.

குருவும் சீடனும்

உலகில் செல்வம் பலவுண்டு. அவற்றுள் சிறந்தது எது ? என்று சிந்தித்துப் பார்த்தேன். புரியவில்லை.  குருவிடம் கேட்டேன்

அவர் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்டார்.

சேர்த்து வைத்த செல்வம் தான் சிறந்தது எனக் கூறினேன்.

 ஆனால் அது வெள்ளம் வந்தால் அதனுடன் போய்விடுமே என்றார்.

பணம் பத்தும் செய்யுமாயிற்றே. அதுதான் சிறந்த செல்வம் எனக் கூறினேன்.

ஆனால் அது தீயில் எரிந்துவிடுமே என்றார்.

தங்கம், வைரம் இவைதான் சிறந்தவை எனக் கூறினேன்.

அரசன் நினைத்தால் மக்கள் பெற்றிருக்கும் நிலத்தையோ பொருளையோ கொள்ளமுடியுமே என்றார்.

அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் தான் சிறந்தவை எனக் கூறினேன்.

ஆனால் அவை கொடுக்கக்கொடுக்க குறைந்து விடுமே என்றார்.

வளமான நிலங்கள் தான் சிறந்தவை எனக் கூறினேன்.

ஆனால் அவற்றைப் பாதுகாக்கா விட்டால் வறண்டு போய்விடுமே என்றார்.

வெள்ளத்தால் போகாமல், தீயில் வேகாமல், வேந்தராலும் கொள்ளமுடியாத, கொடுத்தாலும் குறைவுபடாத, திருடர்களாலும் திருட முடியாத, காப்பதற்கும் எளிதாக இருப்பது எது எனக் கேட்டேன்.

கல்விச்செல்வமே சிறந்தது என்பதனை,

வெள்ளத்தால் போகாது

வெந்தணலால் வேகாது

வேந்தாராலும் கொள்ளத்தான் முடியாது

கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது

கள்ளர்க்கோ மிக அரிது

காவலோ மிக எளிது

கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க

உலகெலாம் பொருள்தேடி உழல்வதேனோ

என விடை கூறித் தெளிவுபடுத்தினார்.

ஆசிரியரும் மாணாக்கரும்

அழகில் சிறந்த அழகு எது? கூந்தல் அழகா, ஆடை அழகா ? , மஞ்சள் பூசிய முக அழகா? எனக் கேட்கிறார் ஆசிரியர்.  பெண்ணுக்கு நீண்ட கூந்தலும் ; வண்ண ஆடையும் ; மஞ்சள் பூசிய அழகும் அழகுதான் என்றாள் மாணவி. ஆனால் அதனை விட அழகு எது? எனக் கேட்கிறார் ஆசிரியர். தெரியவில்லையே? என மாணாக்கர் கூறினர்.

கல்வி தான் அழகு என்றார். ஏன்? எனக் கேட்டாள். இந்த அழகெல்லாம் நிலைபெறாது. கற்ற கல்வி அழகோ வாழ்நாள் முழுதும் அழகுதரும். அழகு மட்டுமல்ல பெருமையும் கல்வியால் தான் விளையும் என்றார் ஆசிரியர். எப்படி? எனக் கேட்டால் மாணவி. ஏனென்றால், கூந்தல் இயற்கையாகவே வளர்வது. அதற்காக மரபணுக்களைத் தான் பாராட்டமுடியும். ஆடை அழகு என்றால் அந்த ஆடையை தயாரித்தவரைத்தான் பாராட்டமுடியும். மஞ்சள் பூசிய முக அழகே அழகு என்றால் மஞ்சலை பூசக்கற்றுக்கொடுத்த தாயாரையே பாராட்டமுடியும். ஆனால் கற்றதால் பெற்ற அழகிற்காக மற்ற எவரையும் பாராட்டுவதில்லை, ஆசிரியர், பெற்றோர் எனப் பலர் பின்னால் இருந்தாலும் கற்ற முயற்சிக்காக கற்றவரே பாராட்டப்படுகிறார். எனவே கல்வி அழகே சிறந்தது என்கிறது ஓர் இலக்கியம். மாணாக்கர்களும் கல்வி அறிவை உணர்ந்துகொள்கின்றனர்.

கல்லாதோர் பெருமை

எத்தனையோ இலக்கியங்கள் கல்வி குறித்த பெருமையை உணர்த்திநிற்கின்றன. பாதிரி மலர் அத்தனைச் சிறப்புடையதாக அமையாவிட்டாலும் நீரில் சேர்ந்தபின் மணம் வீசுகிறது. அது போல கல்லாதவர்கள் கற்றவர்களுடன் சேரும்போது பெருமையடைகின்றனர் என்கிறது ஓர் இலக்கியம்.

கற்றோர் பெருமை

கற்றவர்களை செல்வந்தர்கள் அடக்கிவிடமுடியும் என நினைப்பது தவறு. அப்படி எண்ணுவது தாமரைத் தண்டினால் யானையைக் கட்டிவிடமுடியும் என நினைப்பது போன்றது என்கிறது ஓர் இலக்கியம்.

        பெருமை சேர்க்கும் கல்வி கற்போம்             கற்ற கல்வி சிறக்க நிற்போம்.

 

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தமிழ்க்கற்பிக்கும் விடுகதை – Riddle –Play way to learn tamil


தமிழ்க்கற்பிக்கும் விடுகதை – Riddle –Play way to learn tamil

விடுகதை என்பது கதை விடுவதன்று ; கேட்கப்படும் வினாவிற்கு விடைகூறிச் சிக்கலை விடுவிப்பது. எச்சொல்லையும் ஆய்ந்து நோக்கும் பண்பினை வளர்ப்பது. குழந்தைகளின் கற்கும் ஆரவத்தைத் தூண்டுவது. மொழியின் அருமையினை உணர்த்துவது. எடுத்துக்காட்டிற்கு ஒரு விடுகதை :  

உயிர் இல்லாமல் ஓடித் திரிவான்

மூக்கு இல்லாமல் மூச்சு விடுவான்

வாய் இல்லாமல் தண்ணீர் குடிப்பான்

வயிறு இல்லாமல் கரியைத் தின்பான்

காற்றிற்கு அஞ்சான் மழைக்கு அஞ்சான்

காட்டிலும் மேட்டிலும் அலைவான்

உயிர் இல்லாமல் எப்படி ஓட முடியும்?. மூக்கில்லாமல் எப்படி மூச்சு விடமுடியும்.? வாய் இல்லாமல் எப்படித் தண்ணீர் குடிக்க முடியும் ? வயிறு இல்லாமல் எப்படித் தின்ன முடியும்? இத்தனையும் இருந்தால் அந்த உயிர் காற்றிற்கு அஞ்சாமல் மழைக்கு அஞ்சாமல் எப்படி இருக்கமுடியும் ?. இத்தகைய வீரன் காட்டிலும் மேட்டிலும் எப்படி அலைவான் ? எனக்கேட்டு ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள் விடுகதை கேட்போர். யாரும் சொல்லமுடியாதபோது ‘புகைவண்டி” எனக் கூறி விடையை விடுவிக்கிறார்.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஆணுக்கும் ஒன்பது பருவங்கள் - Nine Stages of Man

ஆணுக்கும் ஒன்பது பருவங்கள் - Nine Stages of Man
தமிழ் வளமுடைய மொழி என்பதற்குப் பழமை, வளமை, செம்மை, தனிமை எனப்பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஒரு பொருளுக்குப் பல சொற்கள் அமைந்துள்ளதேபெண்களைப் பூக்களோடு ஒப்பிட்டு இரண்டிற்கும் ஏழு பருவம் எனக் குறிப்பிடுவர்.
அரும்புமுன் இதழ்கள் குவிந்து சிறிதாக அரும்பும் நிலை, மொட்டுமுன் இதழ்கள் குவிந்து மொக்கு விடும் நிலைமுகைமலர்வதற்கு முகிழ்க்கும் (தோன்றும்) நிலை, மலர்மலர்ந்த நிலை , அலர்- மலர்ந்து (மலர் அல்லாத) விரிந்த மலர்வீவீழ்கின்ற நிலை , செம்மல்விடுதலைக்கு பக்குவப்பட்ட நிலை.
பேதை – 5-8 வயது, பெதும்பை – 9 -10 வயது, மங்கை – 11- 14 வயது, மடந்தை – 15 -18 வயது, அரிவை – 19 – 24 வயது, தெரிவை – 25-29 வயது, பேரிளம்பெண் – 30 – 36 வயது,
அரும்பு பேதைக்கும், மொட்டு பெதும்பைக்கும், முகை மங்கைக்கும், மலர் மடந்தைக்கும், அலர் அரிவைக்கும், வீ தெரிவைக்கும், செம்மல் பேரிளம்பெண்ணுக்கும் ஒப்பிட்டுக் காட்டுவர்.
பெண்களுக்கு மட்டும்தான் பருவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதா ? ஆணுக்கு இல்லையா எனக் கேட்கிறீர்களா ? தமிழில் எது இல்லை. ஆணுக்கும் பருவங்கள் உண்டு.
பாலன் – 1- 7 வயது, மீளி – 8-10 வயது, மறவோன் – 11-14 வயது, திறவோன் – 15 வயது, காளை – 16 வயது, விடலை -17 – 30 வயது, முதுமகன் – 30 வயதுக்கு மேல் என அகராதி குறிப்பிடுகிறது.
ஆண்,பெண்ணுக்கான ஏழு பருவத்தை,
ஆடவர் காளைய ராடூஉ மகன்மைந்த னாளன்பூம
னீடு குமரனு மாண்பெயர் பேதை நிகர்பெதும்பை
தேடிய மங்கை மடந்தை யரிவை தெரிவையுடன்
கூடிய பேரிளம் பெண்ணேழ் பருவஞ்செய் கோதையரே
என திருவேங்கடபாரதியாரின் நிகண்டு நூலானபாரத தீபத்தின்பதினெட்டாம் பாடல் குறிப்பிடுகிறது. ஆடவர், காளையர், ஆடூ, மகன், மைந்தன், பூமன், குமரன் என ஆணுக்கும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்ணுக்கும் வரையறுத்துள்ளதைக் காணலாம்.

***********

இலக்கியம் காட்டும் சுவர்க்கம் - Route for Heaven

இலக்கியம் காட்டும் சுவர்க்கம் - Route for Heaven 

உடுப்பது உடையானது போல் கொடுப்பது கொடையாயிற்று. மக்கட் பிறவியின் பயன் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே. இதனை இலக்கியங்கள் ஏதேனும் ஓர் கருப்பொருளைக்கொண்டு காலந்தோறும் உணர்த்திவருவதனைக் காணமுடிகிறதுதமிழர்கள் வீடுகட்டும்போது பிறர் ஓய்வெடுத்துச்செல்ல திண்ணை கட்டினர். வெயிலில் நடந்து செல்லும் போது களைப்பாற நீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் சத்திரம், சாவடி என அமைத்து வழிப்போக்கர்களைக் காத்தனர். இவ்வறத்தைத் தொடர்ந்து செய்தல் வேண்டும் எனச் சிறுபஞ்சமூலம் எடுத்துரைக்கிறது.

மக்களின் நீர் தேவையினை நிறைவு செய்யும் வகையில் குளம் வெட்டுவர். வெயில் தாக்காத வகையில் கிளைகளை நட்டு மரமாக்கி நிழற்பாதை அமைப்பர். மேடு பள்ளங்களுடைய கரடுமுரடான வழியினைச் சீராக்கிப் போக்குவரத்தை எளிதாக்குவர். தரிசு நிலத்தை உழுது விளை நிலமாக்குவர். ஊருக்குள்ளேயே மக்களின் தாகத்தைத் தீர்க்க கிணறு வெட்டுவர். இவ்வைந்து தொழிலையும் செய்வோர் சுவர்க்கத்தை அடைவர் எனச் சிறுபஞ்சமூலத்தின் அறுபத்தாறாவது பாடல் வழிகாட்டுகிறது.

குளம்தொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்டு உழுவயல் ஆக்கிவளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோடு என்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது

 மானிடர்க்கு மூன்று பக்கம் படிக்கட்டுகள் வைத்தும் கால்நடைகளுக்கு ஒரு பக்கம் சரிவான பாதையும் அமைத்து குளம் வெட்டுவதும் உண்டு. நாடாள்பவரே இச்செயல்களைச் செய்யவேண்டும் என்பதில்லை. மக்களும் செய்யலாம் என்பதனையே இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது. அப்போது சுவர்க்கம் இங்கேயே வந்துவிடும் தானே.

*****************

கண்கள் உறவை வளர்க்கும் - Eye -grows relationship

கண்கள் உறவை வளர்க்கும் - Eye -grows relationship

அறம் என்பது வாழ்க்கை முறைமை. இப்படி வாழ்ந்தால் தான் அழகு என ஆய்ந்து மனநிறைவுடன் வாழக்கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். அன்பை அடித்தளமாகக்கொண்டு குடும்பம் என்னும் ஒழுங்கு முறைமையைக் கொண்டு, தாய், தந்தை, மகன், தமக்கை, தம்பி, அண்ணன், சிற்றப்பன், சித்தி, அத்தை, மாமன், அத்தான், கொழுநன் (கணவன்), மனைவி, கொழுந்தன் (கணவனின் உடன்பிறப்பு) கொழுந்தி (மனைவியின் உடன் பிறப்பு) பாட்டன், பாட்டி என  உறவுகளுக்குப் பெயர்வைத்துக் கூடிவாழக் கற்றுக்கொடுத்தனர். எப்படி வாழ வேண்டும் எனக் கற்பது மட்டுமன்று எப்படி வாழக்கூடாது எனக் கற்பதும் நன்று. அன்பில்லாது வாழ்தல் கூடாது. அன்பு மழை போல் பொழிதல் வேண்டும். நிலம்பார்த்து மழை பெய்தல் இல்லை. அதுபோல் அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டல் வேண்டும். மழை இல்லாவிடில் மரத்தில் கிளை ஏது ? அவ்வாறே அன்புமழை இல்லாவிடில் கிளை என்னும் சுற்றம் ஏது ? நட்பு ஏது ? எனவே அன்பு என்னும் ஈரத்தை கண்களில் பெருக்கி வாழ்தல் வேண்டும். முதுமொழிக்காஞ்சியில்அல்ல பத்துஎன்னும் தலைப்பில்ஈரமில்லாதது கிளை நட்பு அன்றுஎன மதுரைக்கூடலூர்கிழார் குறிப்பிடுகிறார்.

நா கூட சில நேரங்களில் வறண்டுவிடுகிறது. கண்கள் எப்போதும் கருணை என்னும் ஈரத்துடன் விளங்குவதால் தானே ஒளிவீசுகிறது. எண் சாண் உடம்புக்குத் தலையே தலை. தலைக்குக் கண்கள் தானே