ஈரோட்டில் ஒரு புரட்சி
அமைதியாய் ஒரு புரட்சி.
நிலத்தைக் கிழித்து வரும் செடிபோல
உலகம் செழிக்க வைத்த புரட்சி
நடராசன் என்னும் நல்ல மனிதர்
உடல் நலம் குன்றினாலும் உள்ளத்தால் கர்ணனார்
தன் சொத்தைப் பள்ளிக்குக் கொடுக்கச் சொல்லி
விண்ணாளச் சென்றார்
தந்தை நாச்சிமுத்து மகன் கனவை நிறைவேற்ற
மகளிடன் ஒப்புதல் கேட்டார்;
மகிழ்ச்சியுடன் மகள் ஈஸ்வரியும் ஒப்ப
உயிலில் அவ்வாறே செப்பினார்.
தந்தை இறந்தவுடன் கணவனிடம் கேட்டார்
தம் மக்களிடம் கேட்டார்.
எல்லோரும் ஓர் குரலில் சரி என்று மகிழ்வுடனே சொல்ல
தந்தை மகனுக்காக சேர்த்த கோடிக்கணக்கான சொத்தை
அரசு பள்ளிக்கு அன்பளிப்பாக ஆட்சியரிடம் வழங்க
மனித நேயம் எங்கும் பரவியது.
எத்தனை எத்தனை அழகு உள்ளங்கள்
எங்கேனும் ஒரு தடை தான் நிகழ்ந்திருந்தால்
எண்ணங்கள் வண்ணமாகியிருக்காது.
நல் உள்ளம் நற் செயலைத் தடுக்காது.
வாழிய அவர் குலம் ! வாழிய அவர் நலம் !
மீண்டும் மீண்டும் பிறப்பாய் நடராசா
என்றே நாளும் மலரும் புது ரோசா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக