தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

நுகர்வோர் கட்டணம் - consumer charge

 நுகர்வோர் கட்டணம்

        கட்டணத்தை உரிய நேரத்தில் கட்டாததால் விதிக்கப்படும் தண்டத்தொகை,  திருப்பிச் செலுத்தும் தொகை, நிதித் தொகை என்பவை நுகர்வோர் கட்டணமாகும்.

    போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் , கட்டுமானம், வங்கி, காப்பீடு, மருத்துவ சிகிச்சை அனைத்தும் அடங்கும். 

    நுகர்வோருக்கும்  சேவை அளிப்போருக்கும்   சட்டப்படியான ஒப்புதல்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இவ்வகையான ஒப்புதல்களே பொருளை வாங்குவதற்கான நம்பிக்கையை ; ஆர்வத்தை  நுகர்வோரிடம் ஏற்படுத்துகிறது. இதனை உறுதி செய்வதற்காகவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மக்களின் நியாயமான தேவைக்கேற்ப  சட்ட திருத்தங்களும்  அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது. 

    நுகர்வோர் குறைகளைத் தீர்த்துக்கொள்ளும்  பொருட்டு நுகர்வோர் குறை தீர் மன்றங்களை அணுகலாம்

நம் உரிமை அறியாது  பணத்தை இழத்தல் அறியாமை.  தெரிந்து பணத்தை அளிப்பது அறிவுடைமை. தெரியாமல் அளிப்பது அறியாமை.

1. விலை அதிகமாக விற்றனர் எனில் விலைக்குறிப்பிட்ட பொருளின் அடையாளத்தையும்  ரசீதையும் கொண்டு வழக்குத் தொடர்க.

2. பொருள் பழுதெனின் பதிவு அஞ்சலில் புகார் அளித்துவிட்டு, சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிடில் வழக்குத் தொடர்க.

3. எடை பிரச்சினைகள் எனில், உரிய பொருளை அப்படியே காட்டி வழக்குத் தொடர்க.  பிரித்த பிறகு அறிந்திருந்தால்  வேறொரு பாக்கெட்டை வாங்கிவைத்துக்கொண்டு பின் புகார் செய்க.

    எச்செயலைச்செய்தாலும் நமக்கு சாட்சி தேவை.  உரிய  ரசீது இன்றி வழக்குத் தொடர்தல் எதிரிக்குச் சாதகமாகிவிடலாம்.

வழக்குதொடர வழக்கறிஞர் தேவையில்லை. நுகர்வோரே வழக்காடலாம்.  கட்டணம் இல்லை.

  உண்மை உங்களிடம் இருப்பதனை உணர்ந்து  உரிய ஆவணங்கள் இருப்பின்

     மாவட்ட நுகர்வோர் ஆணையத்தை அணுகுக.  தீர்ப்பு உடன்பாடாகா விடில்

             மாநில ஆணையத்தை அணுகலாம். தீர்ப்பு உடன்பாடாகாவிடில்

            தேசிய ஆணையத்தை அணுகலாம்.    மக்களின் உயிருக்கும் உடைமைக்கும்  தீங்கு விளைவிக்காதிருக்கவேண்டும் என்பதே அரசின் கொள்கை.

    எந்நிலையிலும் நுகர்வோர் ஏமாறக் கூடாது என்பது முதல் கொள்கை. ஏமாற்றவும் கூடாது என்பது இரண்டாவது கொள்கை. 

    உண்ணும் பொருளில் கலப்படமா?

    எடையில்  ஏமாற்றும் நிலவரமா?

    குறைகள் தீர்ப்பதில் தாமதமா?

  துணை நிற்கும் என்றும் ;                                     அதற்கே, 

நுகர்வோர் நீதி மன்றம் ;

    




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக