முதுகெலும்பு வலி கழுத்துவலி இல்லாத குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரும் செய்யலாம்.
மூன்று வேளையும் உணவு உண்ணும்முன் செய்யவேண்டியது.
முதலில் –
நிமிர்ந்து நன்றாக அமர்க. இயல்பாக அமர்வதே சுகாசனம் – ஒரு உள்ளங்கை மேல் இன்னொரு உள்ளங்கை வைத்து மூச்சினை கவனிக்க. மெதுவாக 10 எண்ணிக்கை. மனம் அமைதி அடையும்
இரண்டாவது
நிமிர்ந்து முதுகெலும்பு நேராக அமர்க. நடுவிரல், சுண்டு விரலை விட்டுவிட்டு மற்றா மூன்று விரல் நுனிகளைச் சேர்க்கவும். இரண்டு விரலையும் நீட்டி 2 முதல் 5 நிமிடம் வரை மூச்சை சீராக கவனிக்க.
மூன்றாவது
மோதிர விரல் மடித்துவிடுக. சுண்டு விரல் நீட்டுக. மற்ற மூன்று விரல்நுனிகளைச் சேர்க்க. . ஒரு விரலை மட்டும் நீட்டி 2 முதல் 5 நிமிடம் வரை மூச்சை சீராக கவனிக்க.
உசட்டாசனம்
வஜ்ராசனம்; - முட்டி போட்டுஇரண்டு கால்களிடைய அமர்தல். பின் வஜ்ராசனத்திலேயே நிமிர்ந்து இரண்டு கைகளால் இரண்டு கால்களை முன்னிருந்து பின்னோக்கிச் சென்று கால்களைப் பற்றுக. முடிந்தவரை பின்னால் கழுத்தை பூமிநோக்கித் தள்ளவும். மெதுவாக 10 எண்ணிக்கை. மனம் அமைதி அடையும்
பிறை ஆசனம் – நுரையீரல் சுத்தம்
கால்களை ஒரு அகலமாக வைத்து நிற்க. பின்னால் வளைந்தால் விழாமல் இருக்க இரு கைகளையும் இடுப்பில் வைக்க. மெதுவாக பின்னால் முடிந்தவரை வளைக.
நிறைவாக
சுகாசனம் – மெதுவாக மூச்சை இழுத்து , அடக்கி, விடவேண்டும். 5 எண்ணிக்கை அளவில் அளந்து விடுக.
அனைத்து துன்பமும் ஓடிவிடும். வரவே வராது. வருமுன் காப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக