தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 7 அக்டோபர், 2019


காலத்தின் கொடையாக வந்த கலாம் - APJ Abdul Kalam is Times Gift 

இமைக்க மறுக்கும் இமைகளால் விழிக்கென்ன பயன்

சுமக்க மறக்கும் விழுதுகளால் மரத்திற்கென்ன பயன்

நல்லோரை மறந்தால் நானிலம் வாழ்வதெப்படி ?

விண்ணுக்கு விண்கலம் செலுத்தியதைவிட

முடங்கிய கால்கள் நடக்க கருவி செய்ததே பெரிதென்றாரே

நாட்டின் முதல் குடிமகனாம் குடியரசுத்தலைவரைப்

பாடநூல்களில் மட்டும் தானே பார்க்கமுடியும் என்னும் எண்ணம்

பள்ளிகளுக்கு அவர் வந்தபோதுதான் ஓடி ஒளிந்துக்கொண்டதே

நீங்கள் தங்கியபோது ராஜ்பவனமே

எந்த உயிரும். கொல்லப்படாத சைவ (சரவண) பவனமானதே.

நீங்கள் சேர்த்துவைத்த சொத்து மக்களின் அன்பன்றி வேறில்லை

உறங்கவிடாத கனவுகாண் எனக்கூறி உயர்த்திய நல்லுள்ளம் வேறில்லை

காலம் தன்னைக் குறுக்கிக்கொண்டது கலாமாக

அதனால் தான் வாழ்ந்த காலமெல்லாம் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் ஆம்

அந்தக் கலாம் என்னும் மூன்றெழுத்தில்தான்

உழைப்பின் மூச்சிருந்தது. உண்மையின் மூச்சிருந்தது

எளிமையின் மூச்சிருந்தது. ஏற்றத்தின் மூச்சிருந்தது

கலாமா  ! மறக்கலாமா ?. நம் கலாமை மறக்கலாமா ?

2 கருத்துகள்: