தமிழண்ணல் போற்றும் தமிழ்ச்செம்மல் வ.சுப. மாணிக்கனார்
முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி:9940684775
எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்
நன்றி
கொன்ற
மகற்கு என்னும்
தெய்வப்புலவரின் வாக்கிற்கேற்ப
தம்
வாழ்வை மொழிக்காகவும்
இனத்தின் பெருமைக்காகவும்
ஈந்த
தமிழ்ச்சான்றோர்களில் குறிப்பிடத்தக்கவர்
வ.சுப.மாணிக்கனார்.(வ.சுப.மா.) பிற்காலத்
தமிழறிஞர்களில் மும்மணிகள்
எனக்
குறிப்பிடப்பெறுபவர்கள் பண்டிதமணி
கதிரேசஞ்செட்டியார், கவிமணி
தேசிகவிநாயகம் பிள்ளை, ரசிகமணி
தி.க.சிதம்பரநாத
முதலியார்,
இவர்களுடன் நான்காவது
மணியாகத் திகழ்பவர்
வ.சுப. மாணிக்கனார்.
வ.சுப.மா. அவர்கள்
தமிழுக்காகவும் தமிழர்க்காகவும்
தொண்டாற்றிய நிலையினை
தமிழறிஞரான தமிழண்ணல்
வழி
நின்று ஆய
விழைந்ததன் விளைவாகவே
இக்கட்டுரை அமைகிறது.
தமிழின் நிலை
மொழிக்காகப்
போராடிய சான்றோர்களைத்
தன்மானத்தைக் காக்கப்
போராடிய சான்றோர்களாகவே
கருதமுடிகிறது. அவ்வகையில்
தாய்மொழிக்காகப் போராடியவர்கள்
மட்டுமே தமிழர்
உணர்வினைக் காத்தவர்களாகத்
தமிழர் நெஞ்சில்
நிலைத்து நிற்பதனைக்
காணமுடிகிறது. அறம்
வளர்த்து உயர்தனிச்செம்மொழியாக
விளங்கிய தமிழ்மொழியின்
அருமையினை உணர்ந்த
ஆங்கிலேயர் அதற்கீடாகத்
தம்மொழி ஈடாகதென
உணர்ந்தனர். ஆங்கிலேயர்
வேலைவாய்ப்பு என்னும்
ஆயுதத்தின் வழி
தம்
மொழியை இந்தியாவில்
ஆழ
ஊன்றிவிட்டதனைக் காணமுடிகிறது.
எனவே
விடுதலையடைந்து இத்தனைக்
காலமாகியும் அம்மொழியை
விரட்ட முடியாமல்
தமிழர்கள் அடிமைக்கட்டுண்டு
கிடப்பதனைத் தமிழறிஞர்கள்
கண்டு
பொறுக்க முடியாமல்
தம்மால் இயன்றவரை தமிழறிவு ஊட்டிவருவதனைக்
காணமுடிகிறது. இருப்பினும்
ஆங்கிலேயர் பின்பற்றிய
வேலைவாய்ப்பு ஆயுதத்தையே
கைக்கொண்டு மொழியைக்
காத்தாலன்றி மொழி
வளர்ச்சி அமையாதெனத்
தெளியமுடிகிறது.
அரசின்
திட்டங்கள் மட்டுமே
மொழியைக் காக்கும்
எனக்
காத்திருந்தால் மட்டும்
தமிழ்
மொழியினைக் காத்தல்
இயலாது.
தமிழர் ஒவ்வொருவர்
உள்ளங்களிலும் இல்லங்களிலும்
தமிழ்மொழி இடம்பெறவிட்டால்
நாளுக்கு நாள்
தமிழர் வாழ்வில்
பிறமொழி புகும்
அவலநிலை உண்டாகும்
என்பதனை வ.சுப.மா. உணர்த்தியுள்ளார்.
தொடக்கத்தில் பணிக்காக
மட்டுமே பிறமொழிக்
கற்கத் தொடங்கி
நாளடைவில் அம்மொழியில்
பேசுவதே வாழ்க்கை
முறையாக மாறிவிட்டதனையும்
காணமுடிகிறது.
அம்மாவோ
என்னை
நீ
ஆங்கிலவாய்ப் பள்ளிக்குச்
சும்மாவும்
விடாயென்று சொல்லவோ
துடிக்கின்றாய்
அப்பா
நல்லம்மாவென்று அழகுதமிழ்
கூறாமல்
எப்படியோ
வாய்பிளக்கும் இழிவுகண்டு
நாணினையோ ?
இவருடைய
தமிழ்
சூடி
இவர்தம் இயல்பு, பழக்க
வழக்கம், உள்ளக்கிடக்கைகளையும்
வெளிப்படுத்தும் நல்ல
அழகிய
சூடியாகும்” எனத்
தமிழண்ணல் குறிப்பிடுவது
இங்கு
எண்ணத்தக்கது.
எழுத்தும்
பேச்சும்
நூல்கள்
நூல்
பிடித்து வாழும்
நேர்மையான வாழ்விற்கு
அடித்தளமாக நிற்பன. எனவே
”எழுத்தானது
வாசகர்க்கு மனமெலிவினைத்
தராதது,
மெலிந்த மனத்தை
நிமிர்த்துவது, புதுத்தெம்பு
மின்னலைப் போல்
பாய்ச்சுவது, தற்சிந்தனையைக்
கிளறுவது , இதுவே
எழுத்தின் அறுவடையாகும்”
(இலக்கிய விளக்கம்-16) என
எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்
வ.சுப.மா. நாட்டைக்காப்பதில்
பாதுகாப்புப்படையின் தியாக
உணர்வு எங்ஙனம்
போற்றப்படுகிறதோ அதற்கிணையாகப்
பண்பாட்டினைக் காக்கும் இன உணர்வு
எழுத்தாளர்களுக்கே உரியதாவதனை
உணரமுடிகிறது. எழுத்துக்கள்
சுவைஞர்களின் தரத்தினை
மேம்படுத்துவதாக அமைய
வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் “வாசகனை
மேல்நோக்கிக் கை
தூக்கிவிடும் நடையாகவே
அமைதல் வேண்டும்” என
வ.சுப.மா. அறிவுறுத்துவதனைத்
தமிழண்ணல் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்
உழவர்
தமிழ்ச்சான்றோர்கள்
தமிழ்
நிலத்தை உழும்
உழவர்களாகவே நின்று
தமிழ்
இலக்கிய வளத்தைப்
பெருக்கி தமிழ்ப்பண்பாட்டைக்
காத்து வருவதனைக்
காணமுடிகிறது.
தமிழ்
மொழியைக் காக்க
வேண்டுமாயின் பிறமொழிக்
கலவாமை வேண்டும்
என
அறிவுறுத்துகிறார் வ.சுப.மா. இயற்கையாகத்
தோன்றிய மொழியானத்
தமிழை இயற்கிருதம் என்றும்
செயற்கையாகத் தோன்றிய
மொழியான வடமொழியைச்
சமஸ்கிருதம் எனவும்
குறிக்கப்படுகிறது. இதனை
உணர்த்தும் வகையில் “இயற்கை
மொழியாதலின் காலவீழ்ச்சி
அதற்கில்லை. அதனால்
தான்
என்றுமுளதென் தமிழ்
என்று
உண்மைக் காட்டினார்
கம்பர்” என
வ.சுப.மா. குறிப்பிட்டுள்ளதனை
தமிழண்ணல் எடுத்துரைக்கின்றார்.
அன்னையிடம்
கொண்ட
பாசம்
இயற்கையானது. அப்பாசத்தை
வேரறுக்கும் வகையில்
பிறமொழிப் பேசுதலே
பெருமை என்னும்
எண்ணத்தை ஊட்டும்
நிலையே இன்று
பரவிவருகிறது. இந்நிலை
அன்னை
மொழிக்கு மட்டுமின்றி
அன்னையைப் போற்றும்
பண்பாட்டிற்கும் படிப்படியாகக்
கேடு
விளைவிக்கும் என்பதனை “பால்குடி
மறவா
வளர்
இளஞ்செங்காற் குழவிகளைத்
தாய்ப்பால் உண்ணவிடாது
ஆங்கிலம் முதலான
அயல்மடிப்பால்களை வலிந்து
மயங்கி ஊட்டும்
கடும்
கொடும்போக்கினைக் கண்டு
கையாறு எய்தியிருக்கின்றோம்”
என்னும் அடிகளின்
வழி
வ.சுப.மா. வருந்தியுள்ளதனைத்
தமிழண்ணல் குறிப்பிட்டுக்
காட்டியுள்ளார்.
சமயங்கள்
வளர்த்த தமிழ்
தமிழ்
மொழியின் வளர்ச்சிக்குத்
துணை
நிற்கும் இலக்கியங்களுள்
பக்தி
இலக்கியங்களின் வளர்ச்சி
அளப்பரியது. நாத்திகர்கள்
எவரையும் மதிப்புடன்
பேசும் ‘தன்மானம்’ எனக்
குறிப்பிடப்பெறும் மதிப்புரைக்கு
முதன்
முதலாக வித்திட்டவர்
தெய்வப்புலவர் சேக்கிழாரே. இதனைப் “பெரியபுராணமே
முதன்முதல் தலைமை
மாந்தர்க்கும் அவர்
பற்றிய வினைச்சொற்களுக்கும்
‘ர’ கர
ஈறு
கையாண்டு சிறப்பித்தது”
என
வ.சுப. மா. குறிப்பிட்டுள்ளதன்
வழி
பக்தி
இலக்கியத்தின் பெருமையினைத்
தமிழண்ணல் எடுத்துக்காட்டியுள்ளார்.
தமிழர்
கடன்
தமிழ்மொழி
தலைமையிடத்திற்குரிய நிலை
பெற்றிருப்பதனை அவ்வப்போது
இயன்ற
இடங்களில் எல்லாம்
மொழியறிஞர்கள் நிறுவிவருவதனைக்
காணமுடிகிறது. தமிழ்மொழியைத்
தாய்மொழியாகக் கொண்டதனாலேயே
தேசியக்கவியாக பெயரளவில்
மட்டுமே போற்றப்பட்டவர்
மகாகவி பாரதியார். இந்திய
மண்ணில் வங்கக்கவிஞர்
தாகூரைப் போற்றிய
அளவிற்கு தமிழ்க்கவிஞர்
போற்றப்படவில்லை என்பது
தமிழினத்திற்கே பெருங்குறையாகி
விட்டதனையும் உணரமுடிகிறது.
எனினும் மகாகவியின்
கவிதைகளை முறையாக
மொழிபெயர்க்காமல் இந்தியர்
அனைவரும் அறியச்செய்யாத
குறையும் தமிழினத்திற்கே
உரியது. அவ்வாறு
செய்தாலன்றி தமிழறிஞர்களின்
பெருமைகளை நாடோ
உலகமோ
அறிதல் இயலாது
எனத்
தெளியமுடிகிறது. எனவே
வ.சுப. மா. இக்குறையைக்
களைய
எளிய
வழியொன்றினைக் காட்டுகிறார். “பாரதிப்பா
இந்திய நாட்டுப்
பொது
என்பதனை எல்லோரும்
அறியச் செய்தல்
தமிழர் கடன். அது
தமிழ்மொழியில் இருத்தலின் ’தாயின்
மணிக்கொடி’என்னும்
கொடிவாழ்த்து இந்திய
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு
எங்கும் இசை
பெறுதல் வேண்டும்”(இலக்கிய
விளக்கம்-206) என
வ.சுப.மா. அறிவுறுத்தியுள்ளதனைத்
தமிழண்ணல் புலப்படுத்துகிறார்
மொழிக்
கொள்கை
தமிழராய்
வாழ்வதற்கும் தமிழறிஞர்களாய்
வாழ்வதற்கும் இடையே
உள்ளே
வேறுபாடு தமிழ்மொழியைக்
காக்கும் திறத்தைக்கொண்டே
அளவிடமுடிகிறது. ஆனால்
அவ்வகையினின்று மாறுபட்டுத் தமிழறிஞர்கள் என்னும்
பெயரில் மொழிநடையில்
ஒழுக்கத்தைப் பின்பற்றாது
பிறமொழிக்கலப்புடன் எழுதும்
போக்காலேயே தமிழ்ச்சமூகம்
மொழிப்பற்றின்றி வாழ்வதனைக்
காணமுடிகிறது. நடைமுறைக்கு
ஒத்துவராது என
எண்ணித் தாய்மொழியைப்
போற்றாத நிலையே
இன்றைய வாழ்வாகிவிட்டதனையும்
அறிந்துகொள்ளமுடிகிறது.
”புதிய
படைப்புக்கலையில் மொழியறிவும்
தேவை
என்பதைப் பலர்
ஒப்புவதே இல்லை. கல்லில்
சிற்பம் வடிப்பவனுக்குக்
கல்லின் தரமும்
உளியின் கூர்மையும்
பார்க்க வேண்டுமென்ற
நினைவுளது. அவற்றைப்
பேணிப் பயன்படுத்தும்
திறமும் உளது. மண்ணை
வெட்டித் தோண்டுபவன்
கூட
மண்வெட்டியைச் சரிபார்த்துக்
கொள்கிறான். இலக்கியக்கலை
நுண்கலைகளுட் சிறந்த
நுண்கலை. அது
பயன்படுத்தும் மொழியோ, அறிவு
வடிவான சீரிய
கூரிய
செவ்வியதொரு கருவி. ஆனால்
ஒருவரைப் பார்த்து
ஒருவர் படைக்கும்
பழக்கம் ஒன்றே
போதுமென எண்ணும்
தமிழ்ப் படைப்பாளிகள்
மொழி
இலக்கியம் பற்றிய
சிறு
சிந்தனை கூடத்
தவறென
எண்ணியொழிகின்றனர். ‘பண்டித
நடை,
பண்டித நடை’ என்று
கேலி
பேசியே தம்
தலையில் தாமே
மண்ணை
வாரிப் போட்டுக்
கொள்கின்றனர். எதிர்காலத்திலேனும்
தமிழ்ப்புலவர்கள் ஆய்வினும்
படைப்புக்கு மிகு
முக்கியத்துவம் தந்து
அக்கலையில் ஈடுபடவேண்டும்”
(மாணிக்கத்தமிழ்-56) என
வ.சுப. மா. வின்
மொழிக்கொள்கையினைத் தமிழண்ணல்
புலப்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.
காலம்
பலகடந்தும் கம்பர்
இன்றைய தலைமுறைக்கும்
ஏற்புடையவராக விளங்குவதனைக்
காணமுடிகிறது. கம்பராமாயணம்
வடமொழி இராமாயணத்தை
விட
சிறந்து நிற்பதற்கு
தமிழ்மொழியின் வளமே
அடிப்படையாக இருப்பதனைக்
காணமுடிகிறது. அதனாலேயே
நாத்திகம் பேசுவோரும்
கம்பரை ஏற்றிப்புகழ்வதனைக்
கடனாகக் கொண்டுள்ளதும்
தெளிவாகிறது. “கதைக்கு
வடமொழி மூலமாக
இருந்தாலும் கதைமேல்
எழுந்த காப்பியக்
கட்டிடத்துக்குத் தமிழே
மூலமாகும்” (கம்பர்-53) என்னும்
வசு.ப.மா- வின்
மொழிக்கொள்கையினை கம்பரின்
புலமையின்வழிப் புலப்படுத்தியுள்ளதனைத்
தமிழண்ணல் எடுத்துக்காட்டியுள்ளார்.
எழுத்தும்
ஆர்வமும்
உலகிலேயே
இயன்றவரை தாய்மொழியிலேயே
பேசவும் எழுதவும்
வேண்டும் எனத்
தமிழர்களுக்கு மட்டுமே
எடுத்துரைக்க வேண்டிய
அளவிற்குத் தமிழரகள்
நிலை
தாழ்ந்துக்கிடப்பதைக் காணமுடிகிறது.
இதற்குத் தாய்மொழிப்
பற்றின்மையும் பிறமொழி
மோகமுமே காரணமாக
அமைகிறது. பிறமொழியை
எளிதில் கற்று
அம்மொழியில் தேறும்
சிறப்பு தமிழர்க்கே
உரியதாக இருப்பதும்
இக்குறைக்குக் காரணமாக
அமைகிறது. இவ்வாற்றலுக்கும்
தமிழ்மொழி அறிவே
துணை
நிற்பதனை இன்றைய
சமூகத்திற்கு உணர்த்த
வேண்டியது தமிழறிஞர்களின்
கடமையாகவே அமைகிறது.
பொழுதுபோக்கு
என்னும் பெயரில்
அமையும் வெற்றுரைகள்
இளையோர் மனத்தில்
வெறுப்பை உண்டாக்கிவிடுகின்றன.
இதைப்
படிப்பதால் என்ன
பயன்
என்னும் நிலையே
இன்றைய தலைமுறையிடம்
பெருகிவிட்டதனைக் காணமுடிகிறது.
எனவே
எழுத்தாளர்கள் மிகுந்த
கவனத்துடன் எழுதவேண்டியது
அவசியமாகின்றது. பிறமொழியை
நாடிச்செல்லும் போக்கினைக்
குறைக்கும் அளவிற்கு
எழுத்தாற்றல் படைத்தவர்களாக
இன்றைய சமூகம்
தன்னை
வளர்த்துக்கொள்ள வேண்டியதும்
அவசியமாகின்றது. ”செம்மல்
மாணிக்கனார் தம்
எழுத்துக்கள் அனைத்துமே
சொற்செறிவும் பொருட்செறிவும்
கருதி
எழுதப்பட்டனவாதலின் அவற்றுள்
வெற்றுரை என்றோ
கழிக்கத்தக்கன என்றோ
ஒரு
சிறுபகுதி தானும்
அமைந்தில.. . . . . . உடம்பின்கண்
உயிர்
அணுத்தோறும் விரவிநிற்றல்
போல்
அவர்
தம்
நுண்மாண் நுழைபுலம்
காணப்படாத இடமே
இல்லை
எனலாம்”(மாணிக்கத்
தமிழ்,ப-151)
என்னும் தமிழண்ணலின்
கூற்று வ.சுப.மா. வின்
எழுத்தாற்றலை வெள்ளிடைமலையாக
விளக்கி நிற்பதனைக்
காணமுடிகிறது.
தமிழ்
வளர
பிழையின்றி
எழுதுவது மொழிகாக்கும்
கலை.
அக்கலை வளரவேண்டுமாயின்
அயராத
உழைப்பும் மொழியறிவும்
சுருங்கச்சொல்லி விளங்க
வைக்கும் தன்மையும்
புதியன கூறும்
திறமும் அவசியமாகின்றது.
அத்தகைய படைப்புக்களே
காலத்தை விஞ்சி
நிற்கின்றன. அவ்வாறு
தமிழுக்கு வளம்
சேர்க்கும் நூல்கள்
அளவிடற்கரியன. அத்தகைய
இலக்கியங்களுக்கு வழிகாட்டும்
திறத்தனவாக திருக்குறளும்
தொல்காப்பியமும் திகழ்வதனால்
”திருக்குறள்
மக்களுக்கு உயிர்நூல்: தொல்காப்பியம்
தமிழுக்கு உயிர்
நூல்”
என்கிறார் வ.சுப.மா. இக்கோட்பாட்டின்
வழிநின்றே எழுதுவதனை “என்
எழுத்துக்கள் கட்டளைச்
சொற்களால் கட்டளை
நடையில் அமைந்தவை. சொல்
பல்குதல் என்ற
மிகைக்கு இடமில்லாதவை.
செறிவு மிகுந்தவை
வேண்டுங்கால் புதிய
சொல்லாக்கங்களும் புதிய
சொல்
வடிவங்களும் புதிய
தொடராய்ச்சிகளும் உடையவை” (திருக்குறட்
சுடர்-X) என்னும்
வ.சுப.மாவின்
கூற்றினைக் கொண்டே
தமிழண்ணல் தமிழ்
வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை
எடுத்துக்காட்டியுள்ளார்.
எங்கும்
தமிழ்
உலகெங்கும்
பரவி
நின்ற
தமிழர் இன்றும்
அவ்வாறே பரவிநிற்க
தமிழ்மொழி மட்டும்
குறுகிய நிலப்பரப்பில்
ஒடுங்கிவிட்ட நிலையினைக்
காணமுடிகிறது. இந்நிலைக்குக்
காரணம் தமிழர்
தம்
தாய்மொழியை விட்டுவிட்டுப்
பிறமொழியைக் கற்றதனாலேயே
எனத்
தெளியமுடிகிறது. பிறமொழியைக்
கற்க
வேண்டும் என்னும்
ஆர்வத்தைப் போலன்றித்
தம்
மொழியைக் காக்க
வேண்டும் என்னும்
ஆர்வம் இல்லாததே
இதற்குக் காரணம்
என
உணர்ந்துகொள்ளமுடிகிறது. இன்று
பல
சொற்கள் பிற
மொழிகளில் பேசப்படுவதற்குக்
காரணம் மக்களென்று
எளிதாகக் கூறிவிடலாமேயன்றி
அதற்குரிய பொறுப்புணர்வினை
ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள
வேண்டியது அவசியமாகின்றது.
தமிழ்மொழியில் உள்ள
சொற்கள் பிறமொழி
ஆதிக்கத்தினாலேயே வழக்கிழந்துவிட்டதனைக்
காணமுடிகிறது. எனவே
தமிழ்ச்சொற்களை மீட்டுருவாக்கம்
செய்யவேண்டியது தமிழறிஞர்களின்
தலையாய கடமையாகிறது.
“அதிகாரி – அரசு
வினையாளர் திருக்குறட்
சுடர்-55),
வரதட்சணை – வரன்விலை (இலக்கியச்
சாறு.14),
பஞ்ச
சீலம்-
ஐந்தொழுக்கம், சிதம்பர
ரகசியம் – தில்லை
மறை
(திருக்குறட் சுடர்.
15).” என்னும்
தமிழ்ச்சொற்களை எடுத்துக்காட்டி
ஒவ்வொரு எழுத்தாளரும்
அவ்வாறே எழுதி
பேச
வழிகாட்டியாய் இருத்தல்
வேண்டும் என
வ.சுப.மா. அறிவுறுத்தியுள்ளதனைத்
தமிழண்ணல் எடுத்துக்காட்டுகிறார்.
தமிழர்
பண்பாட்டினைக் காத்தல்
தமிழறிஞர்களின் கடமை
என்பதனை உணர்ந்தாலன்றி
தமிழ்
மொழி
வளமும் தமிழர்
நலமும் சிறக்காது
என்பதனை அறிவுறுத்துகிறார்
வ.சுப.மா. ”தமிழில்
எழுதும்போது ‘தமிழ்
ஊர்தியை ஆங்கிலத்
தண்டவாளத்து வேகமாக
ஓட்டுகிறோம். தமிழ்நாடு
மின்சார வாரியம், தமிழ்நாடு
வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு
போக்குவரத்துக் கழகம், இது
முறையா? தமிழ்
நாட்டு’ என்றல்லவா
வர
வேண்டும்? மிகவும்
சிந்தித்து ஒரு
முடிவுக்கு வருகிறார். தமிழ்
நாட்டுப் பல்கலைக்கழகம்
என்னும்போது தமிழ்
நாட்டுக்குரிய , சார்ந்த
எனப்
பொருள்படும். ஆனால்
இங்கு
‘தமிழ்நாடு’ என்பது
பெயராய் – அடைமொழியாய்
பொதுப்பட நிற்கிறது. எனவே
இங்கு
தமிழ்நாடு போக்குவரத்துக்
கழகம்
என்பதை இக்கருத்தை
ஏற்கலாம். செம்மலார் ‘தமிழ்நாடு’என்ற
சொல்
இங்கு
வினைமுதலாய் நிற்கிறது
என்பார். தமிழ்நாடு
அரசு
நடத்தும் கழகம்
என்பதாக விரிப்பார். அதனால்
பெயராக அமையலாம்
என
வழுவமைதி காண்கின்றார்.
ஆயினும் வாக்கியமாகக்
கூறும்போது ‘தமிழ்நாட்டுப்
போக்குவரத்துக் கழகத்தில்
புதிய
பேருந்துகள் வாங்கப்
பெற்றன’ என்றுதான்
கூறவேண்டும்” (மாணிக்கத்
தமிழ்,
ப-147)
எனத்
தமிழண்ணல் குறிப்பிடுவதும்
இங்கு
எண்ணத்தக்கது.
மொழித்
திறமே
அறிவுத்திறம்
திறம்
அறிவினின்று வேறுபடுவதனைக்
காணமுடிகிறது ஓடும்
திறனுடையோர் ஓட்டத்தின்
தன்மையை விளக்கமுடியாததும்
நடக்கவே முடியாதவர்
ஓட்டத்தின் அருமையினைப்
பற்றி
விளக்கமுடிவதுமே திறனுக்கும்
அறிவுக்கும் இடையே
உள்ள
வேறுபாடாக அமைகிறது. எனவே
அறிவினை ஊட்ட
விரும்பும் எழுத்தாளர்கள்
தாய்மொழியில் தம்
கருத்தை வெளிப்படுத்துவதில்
நேர்மையுடன் மொழிக்கலப்ப்பின்றி
மிகவும் பொறுப்புணர்ச்சியுடன்
நடந்துகொள்ள வேண்டும்
என
அறிவுறுத்துகின்றார் வ.சுப.மா.
தமிழ்வழிக்
கல்வியே தாய்ப்பால்
ஆகும்
தமிழ்வழிக்
கல்வியே சமநிலை
வழங்கும்
தமிழ்வழியோடு
பிறமொழி கற்க
என
அவர்
துண்டறிக்கைகளின் முழக்க
வாசகங்களை எழுதி
நாடெங்கும் பரப்பினார்
என
முனைவர் தமிழண்ணல்
குறிப்பிடுவது இங்கு
எண்ணத்தக்கது.
தமிழ்
காக்கும் வழி
தமிழைக்
கண்டு
அஞ்சிய ஆங்கிலேயர்
தம்
மொழியைப் பெரிதென
தமிழர்களை எண்ணவைத்தலான்றி
தமிழகத்தில் காலூன்ற
முடியாது எனத்
தெளிந்திருந்தனர். எனவே
தமிழரை ஆங்கிலம்
கற்கச் செய்தனர். அதன்
வழி
ஆங்கிலம் கற்காதோரை
சிறியர் என
எண்ணச்செய்தனர். உழைத்து
வாழ்ந்தோர் எளியோர்
எனவும் ஏய்த்து
வாழ்வோர் உயர்ந்தோர்
எனவும் எண்ணச்செய்தனர்.
அரசுப்பணி என்பதற்கு
ஆங்கிலம் தேவை
என
வலியுறுத்தி ஆங்கிலம்
கற்றத் தமிழரையே
ஆங்கிலம் கற்காத
தமிழருக்குப் பகையாக்கி
பெரும் வலிமை
படைத்த தமிழரை
அடிமையாக்கினர். மொழியைக்
கற்க
விரும்பாதோரை அடிமைகளாக
மாற்றிய ஆங்கிலேயர்
அவர்களுக்கு வரி
விதித்து ஏழைகளாக்கினர்.
உலகையே அரசாட்சி
செய்த
தமிழினம் அடிமையாக
மாறியதற்குக் காரணம்
தமிழ்
மொழி
வழி
கற்கும் நிலையினை
மாற்றிவிட்டதே எனத்
தெளிவுறுத்துகிறார் வ.சுப.மா. எனவே
தமிழ்மொழியில் கற்றலே
தமிழ்மொழியினையும் தமிழரையும்
காக்கும் வழி
என
உணர்த்துகிறார் வ.சுப.மா. இதற்கான
பணியில் எழுத்தால்
மட்டுமின்றி களத்தில்
இறங்கிப் போராடிய
நிலையினையும் வ.சுப.மா.வின்
தமிழ்ப்பணியின் வழி
அறிந்துகொள்ளமுடிகிறது.
தமிழ்
நாட்டில் ; தமிழ்
பள்ளி
ஏறுக;
தமிழ்
கல்லூரி ஏறுக ; தமிழ்
பல்கலைக்கழகம் ஏறுக ; தமிழ்
ஒன்றே நம் பயிற்று
மொழி
என
வ.சுப.மா. துண்டறிக்கைகளில்
முழக்க வாசகங்களை
எழுதி
நாடெங்கும் பரப்பினார்
எனத்
தமிழண்ணல் கூறுவது
இங்கு
எண்ணத்தக்கது.
பிறமொழியறிவின்
தேவை
தாய்மொழியை
மட்டுமே கற்கவேண்டுமே
என்பதனை எந்தத்
தமிழறிஞரும் குறிப்பிடவில்லை.
தமிழ்மொழியைப் பிழையின்றி
எழுதவும் பயிற்றுவிக்கவும்
வேண்டும் என்றே
அறிவுறுத்தியுள்ளனர். பிறமொழியைக்
கற்றல் இன்றைய
முக்கியத் தேவையாகின்றது.
ஏனெனில் உலகமயமாக்கல்
என்னும் நிலையில்
பிறமொழி கற்க
வேண்டும் எனப்
பலரும் அறிவுறுத்துவதனைக்
காணமுடிகிறது. அவ்வாறு
கற்கும்போது அம்மொழியின்
நிலையினையும் அவற்றோடு
ஒப்பிடுவதன் வழி
தமிழ்மொழியின் பெருமையினையும்
ஒருங்கே அறிந்துகொள்ளமுடிகிறது.
தாய்மொழியைக் கற்காமல்
பிறமொழி மட்டும்
கற்போரே பிற
மொழியை வியந்து
நிற்பதனைக் காணமுடிகிறது.
“இராமாயணத்தின் பல
படலங்கள் தனித்தனி
நூல்
எனத்
தகும்
சிறப்புடையன. செகப்பிரியரின்
நாடகங்கள் அனைத்தையும்
தொகுத்தால் இராமாயணத்தின்
பாதியளவு தானே
இருக்கும். . . . . . . என 33 படலங்களைக்
குறிப்பிட்டு இவற்றிலுள்ள
நாடகப் பண்புகளைத்
தேடியறியும் வேட்கையை
நம்முள் கிளறிவிடுகின்றார்
(கம்பர்-109) எனத்
தமிழண்ணல் குறிப்பிடுவது
இங்கு
எண்ணத்தக்கது.
பண்பு
மாறாத் தமிழர்
உலகமே
தனக்காக வீடு
கட்டிய பொழுது
உலகத்திற்காக வீடு
கட்டிய ஒரே
இனம்
தமிழினம் என்னும்
கூற்றிற்கு முன்னோர்கள்
கட்டிய வீடுகளே
சான்றாக நிற்கின்றன. திண்ணை
கட்டி
வழிபோக்கர்கள் இளைப்பாறவும்
பசியாறவும் செய்தவர்
தமிழர். இதனைத்
தமிழர்கள் தம்
வாழ்க்கை முறையாகவே
கொண்டு சிறந்த
நிலையினையும் காணமுடிகிறது.
தனிப்பட்ட வகையிலும்
நல்லோர்களுடன் சேர்ந்து
செய்யும் செயல்களிலும்
அறம்
தவறாது வாழ்ந்த
நிலையினையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
”ஒப்புரவு
என்பது பொதுக்கொடையினையும்
ஈகை
என்பது தனிக்கொடையினையும்
குறிப்பது எனத்
தெளிவுறுத்துகிறார் வ.சுப.மா. தனி
மனித
நிலையிலும் பொது
நிலையிலும் பிறர்க்கு
வழிகாட்டியாக வாழ
வேண்டிய பண்புகளை
வளர்த்துக்கொள்ளத் தமிழர்
வழிகாட்டியுள்ளதனை வ.சுப.மா. வின்
கூற்றின் வழி
தமிழண்ணல் எடுத்துக்காட்டியுள்ளார்.
வ.சுப.மாவின்
கடலாராய்ச்சி
தமிழ்
இலக்கியக் கடலில்
சங்க
இலக்கியமும் தமிழ்
இலக்கணக் கடலில்
தொல்காப்பியமும் அற
இலக்கியக் கடலில்
திருக்குறளும் பெரும்பங்கு
வகிப்பன. இம்மூன்று
கடலையும் ஆய்ந்த
பெருமை வ.சுப.மா. அவர்களுக்கே
உண்டென்பதனை அவர்தம்
நூல்களின் வழி
அறிந்துகொள்ளமுடிகிறது.
இலக்கணத்தின்
அடிப்படையாக விளங்கும்
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள்
என
அனைத்து இலக்கணத்திற்கும்
எழுத்தெண்ணி விளக்கப்பட்டுள்ளதனைக்
காணமுடிகிறது. எனவே
தொல்காப்பியரை தமிழ்
அளந்த
பெருமான் எனக்
குறிப்பிடுகிறார் வ.சுப.மா.
தமிழால்
மாணிக்கம் தகுதி
பெற்றதும் ; தமிழ்
மாணிக்கத்தால் தகுதி
பெற்றதும் எவ்வாறென்பதை
எடுத்துரைப்பேன் எனத்
தமிழண்ணல் பாவேந்தரின்
பாடல்
அமைப்பில் பாராட்டியுள்ளதே
வ.சுப. மா.வின்
தமிழறிவை நிறுவுகிறது.
நிறைவாக
சங்க
இலக்கியம், தொல்காப்பியம்,
திருக்குறள் ஆகிய
மூன்றின் கல்விக்கும்
ஆய்வுக்கும் பரப்புதலுக்கும்
ஒரு
‘கலங்கரை விளக்கம்’ இம்
மாணிக்கத்தமிழ் என்பதைப்
பொறுப்புணர்ச்சியோடு கூற
விழைகின்றேன் என்னும்
தமிழண்ணலின் கூற்றே
இக்கட்டுரைக்கு அடித்தளமாக
அமைந்துள்ளது.
இன்றைய
தலைமுறையினருக்கு பொருள்
பற்றிய கவனம்
மிகுந்திருக்கிறதேயன்றி ஒழுக்கம், பண்பாடு
குறித்த கவனம்
நாளும் தேய்ந்து
வருவதனைக் காணமுடிகிறது.
எனவே
இலக்கியங்களின் வழி
ஒழுக்கத்தை வளர்க்கும்
தமிழறிஞர்களின் நூல்களை
எடுத்துரைக்கும் வகையிலேயே
வ.சுப. மா. வின்
தமிழ்
நூல்கள் அமைந்துள்ளன
எனத்
தமிழண்ணல் வழி
தெளியமுடிகிறது.
இனத்தைக்
காக்க
வேண்டும் என
நினைப்போர் மொழியைக்
காத்தலில் கவனம்
செலுத்த வேண்டும்
என
அறிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.
மொழியைக்
காப்பதில் கவனம்
செலுத்த வேண்டும்
என
எண்ணுவோர் எழுத்து
நடையில் மட்டுமின்றி
பேச்சு நடையிலும்
நேர்மையாக இருத்தல்
வேண்டும் என
வ.சுப.மா. தெளிவுறுத்தியுள்ளதைக்
காணமுடிகிறது.
தமிழ்மொழி
வளர்ச்சியும் தமிழ்
இனத்தின் வளர்ச்சியும்
தமிழ்
அறிஞர்களின் எழுத்துக்களாலேயே
பாதுகாக்கப்படுகிறது என
உணர்ந்து அவ்வாறே
பொறுப்புணர்வுடன் வாழ்ந்துகாட்டியவர்
வ.சுப.மா. என்பதனை
அவருடைய படைப்புக்களின்
வழி
நின்று தமிழண்ணல் தெளிவுபடுத்தியுள்ளார்.
****************